''வெறியின்
சூழ்ந்த பல் விழைவு அதே கொடிது என, தாழ்ந்த
தறியின் சூழ்ந்து உழி தடம் உணர் ஒடுங்கு என, நசை தாழ்
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ, கற்ற
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது'' என்றான். |
தொடர்ந்து,
''பேய் போல் தன்னைச் சூழ்ந்து கொண்ட பலவகை
ஆசை என்னும் அதுவே யாவற்றினும் கொடிது என்னும்படியாக, ஆழப்
பதிந்த கட்டுத் தறியில் கயிற்றால் கட்டுண்டு அதனையே சுற்றிக்
கொண்டிருந்தவிடத்துத் தான் முன்னே தங்கியிருந்த தடாகத்தை நினைந்து
பார்க்கும் ஆமையைப் போல, உள்ளமும் ஆசையில் சூழ்ந்து கிடக்கும்
ஐம்பொறிகளையே சுற்றிச் சூழ்ந்து பொங்கிய துயரத்துக்கு ஆளாகி, கற்ற
நெறியினால் கருதிய நன்னிலையில் தங்கும் பாங்கு அரிதாம்'' என்றான்.
'ஒடுங்கி'
என்பது ஆமையின் பெயர். இது இங்கு 'ஒடுங்கு' என
நின்று, ஆகு பெயராக ஆமையைக் குறித்தது.
173 |
சுனைய
நீகமே துளிமது வுணாதென முன்னோர்
நனைய தாமரை நவிழ்ந்தவாய் நல்கிய தீந்தே
னனைய வோதிய வரும்பொருள் கைகொடா பொய்யே
புனைய வாயின புரைவளர் வெளிறிதே யென்றான். |
|
''சுனைய நீகமே
துளி மது உணாது என, முன்னோர்
நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன்
அனைய ஓதிய அரும் பொருள் கை கொடா, பொய்யே
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே'' என்றான். |
''குளத்திலுள்ள
தவளை அங்கு மலரிடத்துத் துளிக்கும் தேனை
உண்ணாதது போல், அரும்பாய் இருந்த தாமரை தன் மலர்ந்த வாயினின்று
தந்த இனிய தேன் போல முன்னோர் போதித்த அரிய பொருளைக்
கைக்கொள்ளாமல், பொய்யைப் புனைந்துரைத்தலால் பயனே இது'' என்றும்
சொன்னான்.
|