2 |
போதுவாய்
மலர்ந்த போது
பொதிர்த்தளி
மிடைதல் போல
வோதுவாய் மலர்ந்த நன்னூ
லொழுகிய
வமிர்தத் தீந்தேன்
காதுவா யருந்தல் வெஃகிக்
கணங்கொடு
வெவருங் கேட்பக்
கோதுவாய் கிழிந்த புண்மேற்
குளுமருந்
துறழச் சொல்வான். |
|
போது வாய் மலர்ந்த
போது பொதிர்த்து அளி மிடைதல் போல,
ஓது வாய் மலர்ந்த நல் நூல் ஒழுகிய அமிர்தத் தீம் தேன்
காது வாய் அருந்தல் வெஃகிக் கணம் கொடு எவரும் கேட்ப,
கோது வாய் கிழிந்த புண் மேல் குளும் மருந்து உறழச் சொல்வான். |
மலரின்
வாய் விரிந்த போது வண்டுகள் மிகுதியாக வந்து மொய்ப்பது
போல, இவ்வாறு விரித்து உரைக்கும் சூசையின் வாயினின்று பிறந்த நல்ல
வேத நூல் வழியாக ஒழுகிய அமிழ்தம் போன்ற இனிய தேனைத் தம்
காதுகளை வாயாகக் கொண்டு பருக விரும்பி எல்லோரும் கூட்டமாக வந்து
கேட்டுக் கொண்டிருந்தனர். சூசையும் பாவத்தினால் வாய் கிழிந்த புண்ணின்
மேல் குளிர்ச்சி தரும் மருந்தை தடவினாற் போல அவர்களுக்கு வேண்டிய
அறவுரை சொல்வான்.
3 |
படம்புனைந்
தெழுதப் பட்ட
பங்கய
மெழுவாய் பைம்பூந்
தடம்புனைந் துறைந்தெஞ் ஞான்றுஞ்
சைவலஞ்
சிவைகொள் ளாபோல்
வடம்புனைந் தொளிறு மார்பின்
வடுப்புனைந்
திருண்ட நெஞ்சோ
டுடம்புனைந் தனைத்துங் கேட்டொத்
தொழுகிலான்
வாம னென்பான். |
|