|
பண்ணினும்
என்றவிடத்து 'உம்மை', அது இயலாமை சுட்டி நின்றது.
அதிகாரமெல்லாம் ஆண்டவனிடமிருந்தே வருகின்றது (அரு. 19 : 11)
என்பதனால், அதிகாரியைப் பகைத்து அதிகாரம் எவ்வாறு
நிலைபெறுமென்பது கருத்து.
| 49 |
ஆயினு மவனைநீ
காண்டி லாமையாற்
றாயினு மன்பமை யரசன் றன்மையாய்த்
தீயினுங் கொடுவினை தெரிந்து சேயெலாம்
வீயினு நலதென விரும்பிச் செய்யவோ. |
| |
"ஆயினும், அவனை
நீ காண்டி லாமையால்,
தாயினும் அன்பு அமை அரசன் தன்மையாய்
தீயினும் கொடுவினை தெரிந்து, சேய் எலாம்
வீயினும் நலது என விரும்பிச் செய்யவோ? |
"ஆயினும்,
அரசனின் தன்மை தாயைக் காட்டிலும் அன்பு
அமைந்தது. (அவ்வாறிருக்க, உனக்குப் பகையென்று நீ கருதுகின்ற)
ஒருவனைக் காண இயலாமையால் தீயைக் காட்டிலும் கொடிய வினையைச்
செய்யக் கருதி குழந்தைகளெல்லாம் இறப்பினும் நல்லதேயென்று விரும்பிச்
செய்தல் தகுமா?
குற்றஞ்செய்த
பிள்ளையையே கொல்ல முற்படாள் தாய்
குற்றஞ்செய்ய இருப்பதாக ஐயுற்ற பிள்ளையைக் கண்டு கொல்ல
இயலாமையால், உலகத்துப் பிள்ளைகளையெல்லாம் கொல்வதன் மூலம்
அதுவும் கொலைப்படும் என்று துணிவது அரசனின் தாய்மைப் பண்பிற்கு
எவ்வகையினும் ஏற்காத செயலென்பது கருத்து. "காவல் குழவி
கொள்பவரின் ஓம்புமதி" (புறம் 5)
| 50 |
வீய்வினை
யஞ்சினார் விளிவி லாவரோ
தீய்வினை யஞ்சினார் செத்துஞ் செத்திலாத்
தூய்வினை யெஞ்சிலாத் துதியின் வாழ்வரே
காய்வினை எஞ்சிலாக் கருத்தி னோயென்றான். |
| |
"வீய்வினை அஞ்சினார்
விளிவு இல் ஆவரோ?
தீய்வினை அஞ்சினார் செத்தும் செத்திலா,
தூய்சினை எஞ்சிலாத் துதியின் வாழ்வரே,
காய்வினை எஞ்சிலாக் கருத்தினோய்!" என்றான். |
|