|
"சினத்தாற்
செய்யும் செயலை விடாக் கருத்துள்ள மன்னா, சாவுக்கு
அஞ்சினவர் சாவாதொழிவரோ? தீய செயலைச் செய்ய அஞ்சினவர் அதன்
காரணமாகச் சாகநேரினும், சாவாததும், தூய வினையிற் குறைவு
படாததுமான புகழினால் என்றும் வாழ்ரே என்று ஏலியன் உரை முடிவு
கண்டான்.
வீய்வு,
விளிவு - சாவு. வீய்வினை, தீய்வினை, தூய்வினை
என்றவிடத்தெல்லாம் 'ய்' விரித்தல் விகாரம்.
காலியன்
கயமை
| 51 |
ஏலிய
னென்பவ னிவையெ லாமறை
நூலியன் றுளத்தஞ்சா நுவல்வ தாயபின்
காலிய னென்பவன் கதங்கொ டோதினான்
மாலியன் றிறையவன் வதன நோக்கியே. |
| |
ஏலியன் என்பவன்
இவையெலாம் மறை
நூல் இயன்று உளத்து அஞ்சா நுவல்வது ஆயபின்,
காலியன் என்பவன் கதம் கொடு ஓதினான்.
மால் இயன்று இறையவன் வதனம் நோக்கியே. |
ஏலியன்
மனத்துச் சிறிதும் அஞ்சாமல் இவற்றையெல்லாம் வேதநூல்
முறைப்படி சொல்லிமுடித்த பின், காலியன் என்பவன் அறிவு மயங்கி
அரrனின் முகத்தைப் பார்த்தவண்ணம் சினங்கொண்டு ஏலியனுக்குக் கூறத்
தொடங்கினான்:
அஞ்சா
- அஞ்சாது என்ற எதிர்மறை வினையெச்சம் ஈறுகெட்டது.
கொடு - 'கொண்டு' என்ற சொல்லின் இடைக்குறை.
| 52 |
வீரியர்
தொழிலிதோ வெருவிப் புன்மைசேர்
நாரியர் தொழிலிதோ நவையி லாமறை
யாரியர் தொழிலென வரசி யற்படப்
பூரியர் தொழிலினைப் புகன்று ளாயரோ. |
| |
"வீரியர் தொழில்
இதோ? வெருவிப் புன்மை சேர்
நாரியர் தொழில் இதோ? நவை இலா மறை
ஆரியர் தொழில் என அரசியல் படப்
பூரியர் தொழிலினைப் புகன்றுளாய் அரோ. |
|