|
"நீ
கூறிய இது வீரர்க்கு உரிய செயலோ? அச்சமுற்றுப் புன்மையைக்
கடைப்பிடிக்கும் மகளிர்க்கு உரிய செயலோ? ஈனாக்கு உரிய தொழிலை
வேதநூல் அறிந்த உயர்ந்ததோர் தொழிலெனப் போற்றி அரசியலென்று
தோன்றுமாறு சொல்லியுள்ளாய்.
அரோ
- அசைநிலை. இலா - இலாத என்பதன் ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்.
| 53 |
இன்வளர்
தயைமலி யிறைவ னேவலான்
மின்வளர் படைமுகத் திரத்த வெள்ளமாய்
முன்வளர் தகமையோர் பகைமு ருக்கியே
பொன்வளர் முடிநலம் புனைவ தாயினார். |
| |
"இன் வளர் தயை
மலி இறைவன் ஏவலால்
மின் வளர் படைமுகத்து இரத்த வெள்ளமாய்
முன் வளர் தகமையோர் பகை முருக்கியே
பொன் வளர் முடி நலம் புனைவதாயினார். |
"அரசர்
என்பார் இன்பம் வளர்தற்குக் காரணமான இரக்கம் மிகுந்த
இறைவனின் ஏவலால், தம் முன் வளர்கின்ற தக்கோரது பகையை ஒளி
பெருகுகின்ற படைக்கலத்தின் முகத்தே இரத்த வெள்ளம் பெருக அழித்து,
பொன்னாலாகிய முடியை நலத்தோடு புனைந்து ஆள்வாராயினார்.
| 54 |
சேய்வினை
புரிவரைச் சேர்த்தி யோம்பவோர்
தாய்வினை புரிதலே தரும் மாம்பகை
நோய்வினை புரிவரை நூற லுங்கொடுந்
தீய்வினை புரிதலோ வென்று செப்பினான். |
| |
"சேய் வினை
புரிவரைச் சேர்த்தி ஓம்ப ஓர்
தாய் வினை புரிதலே தருமம் ஆம்; பகை
நோய் வினை புரிவரை நூறலும் கொடுந்
தீய் வினை புரிதலோ? என்று செப்பினான். |
|