பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 32

      "பிள்ளைக்குரிய செயல் செய்வாரை அணைத்துப் பேணும் பொருட்டு
அரசன் ஒரு தாய்க்குரிய செயலைச செய்தலே அறமாகும்; பகையாகித்
துன்பச் செயலைச் செய்பவரை அழித்தலும் கொடிய தீவினை
செய்தலாகுமோ? எனறு காலியன் முடித்துச் சொன்னான்.

      புரிவரை - புரிவாரை என்பது குறுகி நின்றது.

 
                     55
பொற்றொழில் வனைமரப் பாவை பொற்பென
மற்றொழி லொளியொடு வஞ்சங் கோடிய
புற்றொழி லனைவரும் புகன்று கோல்வளை
முற்றொழி லத்தன முரியச் சொல்லினார்.
 
பொன் தொழில் வனை மரப் பாவை பொற்பு என
மல் தொழில் ஒளியொடு வஞ்சம் கோடிய
புன் தொழில் அனைவரும் புகன்று, கோல் வளை
முன் தொழில் அத்தனம் முரியச் சொல்லினார்.

      பொன் வேலைப்பாட்டோடு செய்த மரப்பாவையின் அழகு போல
ஏனைய அனைவரும் மல்லாடும் தொழிலுக்குரிய பெருமையை வெளியே
காட்டித் தம் வஞ்சகத்தை மறைத்துக் கொண்ட ஈனத் தொழிலையே பேசி,
முன் கோல் வளைந்த செயல் அத்தன்மையில் ஒடிந்து கெடும்படி பேசினர்.

 
                     56
வழுக்குடை யிவையெலாம் வழங்கக் கேட்டலு
மிழுக்குடை வழுவர செய்து வானென
வொழுக்குடை யேலிய னுளத்து நொந்துளான்
விழுக்குடை யரசியல் விரும்பிக் கூறினான்.
 
வழுக்கு உடை இவையெலாம் வழங்கக் கேட்டலும்
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என
ஒழுக்கு உடை ஏலியன் உளத்து நொந்துளான்
விழுக்கு உடை அரசியல் விரும்பிக் கூறினான்;

      ஒழுக்கமுள்ள ஏலியன் பிறரெல்லாம் தவறான இவற்றையெல்லாம்
சொல்லக் கேட்டதும், இழிவு தரும் குற்றத்திற்கு அரசன் ஆளாவானென்று
தன் உள்ளத்து நொந்தவனாய், சிறப்பான அரசியல் நிலைபெற
வேண்டுமென்று விரும்பித் கூறலானான்;