பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 33

                      ஏலியன் மறையுரை

      - விளம், - மா, தேமா, - விளம், -மா, தேமா

 
                 57
தப்புற வுரைத்த மாற்றந்
     தந்தன கடுநோய் தீர்க்குங்
கைப்புற வுரைத்த மெய்மை
     கனிவெனக் கேட்கிற் பார்க்கே
துப்புற விளங்கு மௌலி
     சூடினோ யன்பைச் சூடிச்
செப்புற நினைத்த வாய்மை
     சினந்தினு முரைப்பே னானே.
 
"தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடுநோய் தீர்க்கும்
கைப்பு உற உரைத்த மெய்மை கனிவு எனக் கேட்பிற் பார்க்கே;
துப்பு உற விளங்கும் மௌலி சூடினோய், அன்பைச் சூடிச்
செப்புற நினைத்த வாய்மை, சினந்தினும் உரைப்பேன் நானே.

      "பவளம் பொருந்தி ஒளியுடன் விளங்கும் முடியை அணிந்த மன்னா,
செவி கைக்கக்கூறிய உண்மையானது கனிவுடன் கேட்பவர்க்குத் தப்பாக
பிறர்முன் சொல்லிய சொல் தந்த கடுமையான துன்பத்தைத் தீர்த்து
வைக்கும்;அதனால், நீ என்னைச் சினந்து கொண்டாலும், அன்பைக்
கொண்டு நான் சொல்ல நினைந்த உண்மையைச் சொல்லியே தீருவேன்.

      
தந்தன - 'தந்த' என்ற பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை
பெற்று வந்தது.

 
                             58
நூலிய னுணங்கு கேள்வி நோக்கினார் முகத்தை நோக்கார்
கோலியல் கோடக் கோடிக் கூறுவர் பகையிற் றீயார்
காலிய னோக்கி யாடுங் கலைக்கொடி யன்னார்க் கேட்பின்
வேலியல் பகையி லானும் வேரொடு கெடுமுன் வாழ்க்கை,