"நூல் இயல் நுணங்கு
கேள்வி நோக்கினார் முகத்தை நோக்கார்;
கோல் இயல் கோடக் கோடிக் கூறுவர் பகையின் தீயார்:
கால் இயல் நோக்கி ஆடும் கலைக் கொடி அன்னார்க் கேட்பின்,
வேல் இயல் பகை இலானும் வேரொடு கெடும் உன் வாழ்க்கை. |
"அரசே,
நீதிநூல் நெறிப்பட்ட நுணுகிய கேள்வியறிவின் தன்மை
நோக்கிப் பேசுபவர் கேட்பவர்தம் முகத்தை நோக்கார்; செங்கோலின்
தன்மை வளையுமாறு நீதியை வளைத்துப் பேசுபவர் பகைவரைக் காட்டிலும்
தீயவராவார்; அதனால், காற்றின் போக்கை நோக்கி அதற்கேற்ப ஆடும்
துணிக்கொடி போன்றவர் சொல்லைக் கேட்டு நடப்பின், கையில் வேல்
பொருந்திய பகைவர் இல்லாமலும் உன் வாழ்க்கை வேரோடு அழியும்.
| 59 |
கற்றுறு
மாட்சி பூண்டு
கசடறு
மறையி னூலா
லுற்றுறு பொருள்க டேர்ந்தே
யுணர்த்துவ
தொன்று கேண்மோ
சொற்றுறு மெனது சூட்சித்
துணிவிழி
வாகத் தோன்றின்
முற்றுறு மொழியைக் கேட்டு
முனிதியே
முருகு வேலோய் |
| |
"கற்றுஉறு மாட்சி
பூண்டு கசடு அறு மறையின் நூலால்
உற்றுஉறு பொருள்கள் தேர்ந்தே உணர்த்துவது ஒன்று கேண்மோ;
சொற்று உறும் எனது சூட்சித் துணிவு இழிவாகத் தோன்றின்,
முற்றுஉறு மொழியைக் கேட்டு முனிதியே, முருகு வேலோய்: |
"அழகிய
வேலை உடையவனே, நீதி நூல்களைக் கற்றதனால் உற்ற
மாண்பு பூண்டும் குற்றமற்ற வேத நூலால் சிறந்த பொருள்களை உற்று
நோக்கி ஆராய்ந்தும் உனக்கு நான் உணர்த்தும் காரியம் ஒன்று உண்டு;
அதனைக் கேள்: நான் முடித்துக் கூறும் மொழி வரையிலே கேட்டு, கூறும்
எனது யோசனையின் முடிவு இழிவானதாகத் தோன்றினால், அப்பொழுது
என்னைச் சினந்துகொள்.
|