பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 35

      'உறு பொருள்கள் உற்றுத் தேர்ந்து' என மாற்றுக. கேண்மோ -
கேள்: 'மோ' முன்னிலையசை. சொல்லுறும் என்பது சொற்றுறும் என வந்தது.

 
                  60
"தேறிய தவத்தி னீண்டு
     சிறந்தமோ யிசனை நித்தை
கூறிய வபீரோன் றாத்தான்
     கோரனென் றவரை யீண்டே
கீறிய புவிவி ழுங்கிக்
     கேடுற வவரைச் சார்ந்தோ
ரூறிய வழலின் வெள்ளத்
     தொருங்கையைம் பதவர் வெந்தார்.
 
'தேறிய தவத்தின் நீண்டு சிறந்த மோயிசனை நிந்தை
கூறிய அபீரோன் தாத்தான் கோரன் என்றவரை ஈண்டே
கீறிய புவி விழுங்கிக் கேடு உற, அவரைச் சார்ந்தோர்
ஊறிய அழலின் வெள்ளத்து ஒருங்கு ஐயைம்பதவர் வெந்தார்.

      "நெடுநாள் நிலைத்துத் தேறிய தவத்திற் சிறந்த மோயிசனை
நிந்தித்துப் பேசிய அபீரோன் தாத்தான் கோரனென்ற மூவரையும்
இந்நாட்டிலேயே பிளந்த பூமி விழங்கியதனால் அவர்கள் கேடுற்றனர்.
அன்றியும், அவர்களைச் சேர்ந்தோர் இருநூற்றைம்பது பேரும் அவ்விடத்திற்
பொங்கியெழுந்த நெருப்பு வெள்ளத்தில் வெந்து மநை்தனர்.

      இந்நிகழ்ச்சி: எண். 16 1 - 35.

 
                 61
பின்னியற் பொருவா வன்னான்
     பெருந்தகை யிகழ்ந்து பேசு
மன்னியத் தவணோ ரீரே
     ழாயிரத் தேழு நூறும்
வன்னியத் தடத்தி வெம்பி
     வயச்சினத் திறைவ னீதி
யுன்னியற் குள்ளங் கூச
      வொருங்குவெந் தடலை யானார்