பொறி குலாய்க்
கிடந்த மார்பில் புண்ணியம் ஒரு பால் ஓர் பால்
செறி குலாய்க் கிடந்த காமம் செருப் பட, நடுவில் பட்ட
வெறி குலாய்க் கிடந்த மால் விகன்றென நெஞ்சம் சோர,
நெறி குலாய்க் கிடந்த சில நிலை விழைந்து உரைக்கல் உற்றான். |
பொலிவு
பொருந்திக் கிடந்ததன் மார்பில் புண்ணிய உணர்வு ஒரு
பக்கமாகவும் செறிந்து மிகுந்து கிடந்த காம உணர்வு மற்றொரு பக்கமாகவும்
நின்று போராட. இடையில் அகப்பட்டுக் கொண்ட மணம் பொருந்திய
மாலை மெலிந்தாற்போல வாமன் நெஞ்சம் சோர்வுற்றது. இறுதியில்.
நன்னெறியோடு பொருந்திக் கிடந்த ஒழுக்க நிலையை விரும்பியவனாய்
அவன் சூசையை நோக்கிப் பின்வருமாறு சொல்லலானான்:
7 |
சுருதிநூ
லுயிர்பெற் றன்ன
சுடர்த்தவத்
துணர்வின் மிக்கோய்
கருதிநூ லுரைப்பக் கேட்டுக்
களிப்புறின்
சிலம்ப வீரத்
திருதிநூன் முடவன் கேட்ட
தென்னநான்
கனிந்த தல்லாற்
பொருதிநூ லொழுக்கத் தஞ்சா
போதலே
யாற்றா தென்றான். |
|
"சுருதி நூல் உயிர்
பெற்று அன்ன சுடர்த் தவத்து உணர்வின் மிக்கோய்,
கருதி நூல் உரைப்பக் கேட்டுக் களிப்பு உறின், சிலம்ப வீரத்து
இருதி நூல் முடவன் கேட்டது என்ன நான் கனிந்தது அல்லால்,
பொருது இந்நூல் ஒழுக்கத்து அஞ்சா போதலே ஆற்றாது" என்றான். |
"வேத
நூல் உயிர் பெற்று வந்தது போன்று ஒளி பொருந்திய
தவத்தோடு உணர்விலும் மிக்கவனே, பயன் பெறக் கருதி நீ ஒழுக்க நூலை
விரித்துரைக்கக் கேட்டு நான் களிப்புறுவேனாயினும், சிலப்பம் எனும்
வீரவித்தைக்குத் துணையாகும் நூலை முடவன் கேட்ட
|