பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 292

"கற்ற நூல் எளிய தோன்றி, கற்கும் முன் அரியது அன்றோ?
மற்ற நூல் போல வாய்ந்த மறை நெறி ஒழுகல், வில்லால்
பெற்ற நூல் வீர வல்லோய், பிறந்த போது அறிந்தாய் கொல்லோ?
உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது
                                        என்றாயோ?


     "கற்ற நூல் கற்ற பின் எளிதாய்த் தோன்றினும், அதுவும் கற்குமுன்
அரியதே அன்றோ? பயன் வாய்ந்த வேத நெறிப்படி ஒழுகுதல் என்பதும்
முன் சொல்லிய நூற் கல்வி போன்றதே ஆகும். பெற்ற நூலறிவைக்
கொண்டு வில்லாற் செய்யும் வீரத்தில் வல்லவனே, நீ பிறந்தபோதே
வில்வித்தையை அறிந்திருந்தாயோ? நீ அடைந்துள்ள அந்நூலறிவை
அடையுமுன்னே அவ்வித்தையைத் தானே உணர்ந்து கொண்டு, அது
உனக்கு எளிது என்று பேசினாயோ?

 
              10
வில்செய்வார் கொண்ட வாறும்
     வெங்கணை தொடுத்த வாறுங்
கல்செய்தோ ளிருந்த வாறுங்
     கண்பொருத் துகின்ற வாறுங்
கொல்செய்கோல் பாய்ந்த வாறுங்
     குறிப்பட லன்றிக் காணா
மல்செய்வார் தொழிலைக் கண்டார்
     மைந்தர்செய் தொழிலோ வென்பார்
 

"வில் செய் வார் கொண்ட ஆறும், வெங் கணைதொடுத்த ஆறும்,
கல் செய் தோள் இருந்த ஆறும், கண் பொருத்துகின்ற ஆறும்,
கொல் செய் கோல் பாய்ந்த ஆறும் குறிப் படல் அன்றிக் காணா,
மல் செய்வார் தொழிலைக் கண்டார், 'மைந்தர் செய் தொழிலோ'
                                         என்பார்


     "எய்த அம்பு குறியில் சென்று தைத்தல் ஒன்றையே கண்டதன்றி,
வில் தொழில் செய்வதற்கான நாணை ஏற்றிய தன்மையும், அதனில் கொடிய
அம்பைத்தொடுத்த தன்மையும், கல்லாற் செய்தது போன்ற தோள்
விறைத்திருந்த தன்மையையும், கண் இலங்கை நோக்கிப் பொருத்துகின்ற