பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 293

தன்மையையும், கொலைத் தொழிலைச் செய்யும் அம்பு பாய்ந்து சென்ற
தன்மையையும் காணாமல், போர்செய்வோரின் தொழிலைப் பொதுப்படக்
கண்டு நின்றோர், "இது மனிதர் செய்யக் கூடிய தொழிலோ" என்று வியந்து
உரைப்பார்.

 
                    11
புகன்றவம் பெழுது மாறும்
     பொருதவை விலக்கு மாறு
மிகன்றமர் நீந்து மாறு
     மெஃகினுட் காக்கு மாறு
மகன்றமர் வளைக்கு மாறு
     மதிரவாள் சுழற்று மாறும்
விகன்றமர் காணார் கண்டால்
     வியந்துள மாழ்வ ரன்றோ.
 
"புகன்ற அம்பு எழுதும் ஆறும், பொருது அவை விலக்கும் ஆறும்,
இகன்று அமர் நீந்தும் ஆறும், எஃகினுள் காக்கும் ஆறும்,
அகன்று அமர் வளைக்கும் ஆறும், அதிர வாள் சுழற்றும் ஆறும்
விகன்று அமர் காணார் கண்டால், வியந்து உளம் மாழ்வர் அன்றோ?

     "போரை முன் கண்டறியாதவர் முன் சொல்லியவாறு அம்பு எழுந்து
செல்லும் தன்மையையும், ஏவிய அவற்றை எதிர்த்துப் போர் புரிந்து
தடுக்கும் தன்மையையும், மாறுபட்டுக் போர்க் களத்தில் நீந்தி மீளும்
தன்மையையும், வேலினின்று தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மையையும்,
விலகுவது போல்சென்று போர்க் களத்தை வளைத்துக் கொள்ளும்
தன்மையையும், பகைவர் அதிமாறு வாளைச் சுழற்றும் தன்மையையும்,
வேறுபடக் காண நேர்ந்ததால், மெலிந்து வியந்து மயங்குவார் அல்லவா?

 
                12
சூற்புறத் தழல மின்னிச்
     சூழெலா மதிர்ப்ப வார்ந்து
மேற்புறத் தெழுங்கா ரொத்த
     வேழமே லேதிர்த்த போழ்திற்