காற்புறத்
தொளிக்கு மாறுங்
கைப்புறத்
திரியு மாறும்
வாற்புறத் தொழுகு மாறும்
வாயுரை
வழங்கு மாறோ. |
|
"சூல் புறத்து
அழல மின்னி, சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து
மேல் புறத்து எழும் கார் ஒத்த வேழம் மேல் எதிர்த்த போழ்தில்,
கால் புறத்து ஒளிக்கும் ஆறும், கைப் புறத்து இரியும் ஆறும்.
வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ? |
"கருப்ப
முதிர்ச்சியால் புறத்தே நெருப்புப் பிறக்க மின்னி,
சுற்றிலுமுள்ள எல்லாம் அதிருமாறு முழங்கி மேலே வானிடத்து எழும்
கருமேகம் போன்ற யானை தன்மேல் எதிர்த்து வந்த வேளையில், ஒருவன்
அதன் கால்களுக்கு இடையே ஒளிந்து கொள்ளும் தன்மையும், துதிக்கைப்
பக்கத்து அகப்படாமல் விலகிக் கொள்ளும் தன்மையும், வாலின் பக்கமாக
நழுவிச் செல்லும் தன்மையும் ஆகிய திறமெல்லாம் வாய் மொழியால்
பிறருக்கு எடுத்துக்கூற முடியுமோ?
13 |
நிரப்பற
நெடுந்தேர்ப் போரும்
நிணமருப்
பிபத்தின் போரும்
பரப்பற விவுளி பாய்ந்து
படர்துகட்
போரு மற்றக்
கரப்பறக் கற்ற போரும்
கடிதுனக்
கிவையே தோன்றா
துரப்பற சருள மூழ்கி
யூனுகர்ந்
தொளிகால் வேலோய். |
|
"நிரப்பு அற
நெடுந் தேர்ப் போரும், நிண மருப்பு இபத்தின் போரும்,
பரப்பு அற இவுளி பாய்ந்து படர் துகள் போரும், மற்றக்
கரப்பு அறக் கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றா,
துரப்பறசர் உளம் மூழ்கி ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய்! |
துரத்தப்படும்
அரசரின் நெஞ்சினுள் புகுந்து அவர் ஊனை உண்டு
ஒளியை. உமிழும் வேலை உடையவனே, குறையே அற நெடிய தேரைக்
|