15 |
ஆடக
மொளிறு மாணி
யலமரத்
திண்கொண் டெங்கு
மாடக நரம்பை நோண்டு
மாத்திரை
நிறைய வீக்கித்
தோடக டிழிதேன் கீதந்
தொகுவிர
லுலவி யார்க்கு
நாடகங் கண்ட யாரு
நமக்கெளி
தென்பார் கொல்லோ. |
|
"ஆடகம் ஒளிறும்
ஆணி அலமரத் திண் கொண்டு், எங்கும்
மாடக நரம்பை நோண்டும் மாத்திரை நிறைய வீக்கி,
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும்
நாடகம் கண்ட யாரும், 'நமக்கு எளிது' என்பார் கொல்லோ? |
"பொன்
போல் ஒளிரும் முறுக்காணி சுழல திண் என்று எங்கும்
இசைஎழுப்ப, வீணையின் நரம்புகளைத் தடவுவதற்கு ஏற்ற மாத்திரை
பொருந்த இழுத்துக்கட்டி, முழு விரல்களையும் முறைப்படி உலாவ விட்டு
இதழ்களின் உள்ளிடத்திருந்து இறங்கும் தேன் சுவை போன்ற பாடல்
ஒலிக்க நடைபெறும் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த யாவருமே, 'இது நமக்கும்
எளிது' என்று சொல்லக் கூடுமோ?
இசையைக்
கேட்டும் நடனத்தைக் கண்டும் மகிழ்தல் எல்லோருக்கும்
பொதுவாயினும், அவற்றைக் கொண்டு நடத்துதல் அத்துறையைக் கற்றுத்
தேர்ந்தவர்க்கே கைகூடுவதாம் என்பது கருத்து.
16 |
பகைபடக்
கலந்த வண்ணம்
பழுதிலோ
வியந்தோன் றாறு
நகைபடப் பசும்பொன் வீக்கி
நவிரணி
யமைக்கு மாறும்
வகைபட நரம்பின் பாலால்
வந்தநோ
யுரைக்கு மாறுந்
தொகைபடப் பழகாத் தன்மைத்
தொழிலெலா
மரிய வன்றோ. |
|