"கடலைக் கடைய
அமிர்தமொடு கடுவும் பிறந்தது எனப்
படலைக் கதையாய் அறிந்தது அலால், பயனாய்க் கண்டது இலை.
மடலைக் குடைய ஊறிய தேன் வதைத்த சொல் அமிர்தத்து
உடலைக் கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண்
வாய்மொழியே.
|
"கடலைக்
கடையவே அமிழ்தத்தோடு நஞ்சும் பிறந்தது என்று மலர்
மாலை போல் கட்டிய கதையாய் அறிந்ததேயல்லாமல், நடைமுறையில்
பயனளவாகக் கண்டது இல்லை. இதழ்களை வண்டுகள் குடைய ஊறிய
தேனையும் வதைத்த பெண்ணின் வாய்மொழியாகிய சொல்
அமிழ்தத்தினின்று உடலைக் கொலை செய்து உயிரையும் சேர்த்து உண்ணும்
நஞ்சு ஒழுகும்!
| 30 |
குழலாற் பிறழா
துயிர்விசிப்பார்
குரலா னஞ்சுயிர்ப்பார்
கழலாற் சிலம்ப மருட்டிடுவார்
கண்ணாற் கணைதொடுப்பார்
நிலழாற் கலன்கொண் டிருள்மொய்ப்பார்
நிறைதம் முறுப்பெல்லா
மழலாற் சுடச்சுட் டுயிருண்டுண்
டாற்றாப் பசிகொள்வார். |
| |
"குழலால் பிறழாது
உயிர் விசிப்பார்; குரலால் நஞ்சு உயிர்ப்பார்;
கழலால் சிலம்ப மருட்டிடுவார்; கண்ணால் கணை தொடுப்பார்;
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார்; நிறை தம் உறுப்பு எல்லாம்
அழலால் சுடச் சுட்டு, உயிர் உண்டு உண்டு, ஆற்றாப் பசி கொள்வார். |
"மகளிர்
தம் கூந்தல் அழகால் ஆடவர் உயிரைத் தப்ப விடாது கட்டி
வைப்பர்; தம் இனிய குரலால் நஞ்சைக் கக்குவர்; சிலம்புகள் ஒலிக்கும்
நடையால் மயக்குவர்; கண்களால் அம்பு எய்வர்; அணிந்த
அணிகலன்களைக் கொண்டு, அவற்றின் ஒளியால் இருள் மொய்க்கச்
செய்வர்; கொடுமை நிறைந்த தம் உறுப்புகளெல்லாம் நெருப்பாய்ச் சுடக்
கொண்டு ஆடவர் உயிரைச் சுட்டு, உண்டு உண்டு, பின்னும் தணியாத
காமப் பசி கொண்டு அலைவர்.
|