| 31 |
போதங் கையா
ருளரியபண்
புழுங்கிச்
செய் கொலையோ
வேதங் கொண்டா ரெண்ணுவர்மற்
றெண்ணும்
பாங்கரிதே
கீதம் பாலாய்ச் சுரந்தெனத்தீக்
கிளையோ
வேலோநச்
சோதங் கொல்லோ விருசெவியூ
டூட்டி
யுயிர்கொல்வார். |
| |
"போது அம் கையார்
உளரிய பண் புழுங்கிச் செய் கொலையோ
ஏதம் கொண்டார் எண்ணுவர்; மற்று எண்ணும் பாங்கு அரிதே.
கீதம் பாலாய்ச் சுரந்தென, தீக் கிளையோ, வேலோ, நச்சு
ஓதம் கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார். |
"மலர்
போல் அழகிய கையை உடைய அம்மகளிர் தடவி வாசித்த
யாழ் சினந்து செய்யும் கொலைத் தொழிலையோ அத்துன்பத்தை
அனுபவித்துக் கண்டு கொண்டவரே எண்ணி மதிப்பிடுவர்; மற்றவர் அதனை
எண்ணி மதிப்பிடும் தன்மை அரிது. அவர்கள் அந்த யாழினின்று பாடல்
பாலாய்ச் சுரந்ததுபோற் காட்டி, கிளையுள்ள நெருப்புப் பந்தத்தையோ,
வேலையோ, நச்சுக் கடலையோ ஆடவர்தம் இரு செவிகளின் ஊடே ஊட்டி
அவர்தம் உயிரைக் கொல்வர்.
ஓதம்
கொல்லோ - 'கொல்' அசைநிலை.
| 32 |
என்னே மற்ற
தியானுரைப்பே
னெரிவிண்
டிடித்தசனி
மின்னே தொடராக் கானுளதேல்
மின்பெண்
ணசைக்கிறுதல்
பின்னே தொடராக் காலமிலை
பெரும்புண்
ணீரொழுக
வன்னே யறிவே னானல்லா
லறியாய்
பொறிவென்றோய். |
|