பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 308

"என்னே மற்றது யான் உரைப்பேன்? எரி விண்டு இடித்து அசனி
மின்னே தொடராக் கால் உளதேல், மின் பெண் நசைக்கு இறுதல்
பின்னே தொடராக் காலம் இலை. பெரும் புண் நீர் ஒழுக
அன்னே அறிவேன் நான் அல்லால், அறியாய், பொறி வென்றோய்!


     "காமத்தின் ஏனைய தீங்கெல்லாம் நான் எவ்வாறு விரித்து உரைப்பேன்? மின்
னல் முதலில் நெருப்பைக் கக்கிய பின் இடி இடித்து
அதனைத் தொடராத காலமும் உளதாயினும், மின்னல் போன்ற
பெண்ணாசைக்குப் பின்னே சாவு தொடராத காலம் இல்லை.
அத்தன்மையைப் பெரும் புண் கொண்டு சீழ் நீர் ஒழுக அனுபவத்திற்
கண்ட நான் அறிவேனேயல்லாமல், ஐம் பொறிகளையும் வென்றவனே, நீ
அறிய மாட்டாய்.

     மற்றது + யான் - 'மற்றதியான்' என, யகரம் வரக் குற்றியலுகரம்
குற்றியலிகரமாய்த் திரிந்தது.

 
             33
சாதல் மிகவே கார்முகவெஞ்
     சரத்தின் மழைபனிப்ப
தாதல் மிகவே கணைக்கண்ணா
     ரணிப்பூஞ் சாயலின்மேற்
காதல் மிகவே கற்றபல
     கல்வி எவன் செய்யு
மோதல் மிகவே நூற்றுறைநீத்
     துணர்வோ யெனத்தொழுதான்.
 

"சாதல் மிகவே கார்முக வெஞ் சரத்தின் மழை பனிப்பது
ஆதல் மிகவே கணைக் கண்ணார் அணிப் பூஞ் சாயலின் மேல்
காதல் மிகவே, கற்ற பல கல்வி எவன் செய்யும்,
ஓதல் மிகவே நூல் துறை நீத்து உணர்வோய்?" எனத் தொழுதான்.

     "படிப்பு மிகுதியினால் நூலின் பல்வேறு துறைகளையும் கடந்த அறிவு
படைத்தவனே, கொலை மிகுமாறு வில்லினின்று பொழிகின்ற கொடிய அம்பு
மழையும் தோற்று மிகவே நடுங்குமாறு அம்புக் கண் படைத்த மகளிர்தம்
அழகிய மெல்லிய சாயலின்மீது ஒருவனுக்குக் காதல் மிகுமாயின், அவன்