|
கற்ற பல கல்வியும்
என்ன பயனைச் செய்யும்?" என்று கூறி வாமன்
சூசையைத் தொழுதான்.
காம
நோய்க்கு ஏம மருந்து
| 34 |
காதன் மிக்கங்
கெவன் செய்யுங்
கல்வி
நலமென்றாய்
நாதன் மிக்க நீதிவளர்
நரகத்
தெய்தியகாந்
சாதன் மிக்க வின்புண்டார்
தாமாங்
கெவன்செய்வார்
வீதன் மிக்க மிடல்வேலோ
யென்றான்
வினைவென்றான். |
| |
"காதல் மிக்கு
அங்கு எவன் செய்யும் கல்வி நலம் என்றாய்.
நாதன் மிக்க நீதி வளர் நரகத்து எய்தியகால்,
காதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார்,
வீதல் மிக்க மிடல் வேலோய்?" என்றான் வினை வென்றான். |
தீவினையை
வென்றவனாகிய சூசை அது கேட்டு, வாமனை நோக்கி,
"கொலைத் தொழில் மிக்க கொடிய வேலை உடையவனே, காதல் மிஞ்சிய
விடத்துக் கல்வி நலமெல்லாம் என்ன பயனைச் செய்யுமென்று சொன்னாய்.
நானும் ஒன்று கேட்கிறேன்: இவ்வுலகில் தம் ஆன்மா சாதற்குக் காரணமான
மிக்க காம இன்பத்தை உண்டவர் அதன் பயனாய் ஆண்டவனின் மிக்க
நீதியால் தோன்றிய நரகத்தை அடைந்தபோது என்ன செய்வர்?" என்றான்.
எனவே,
அறிவும் வானுலக நாட்டமும் கைகொடாவிடினும், நரகத்தைப்
பற்றிய அச்சமேனும் காமத்தை வெல்லத் தூண்டுதலாய் அமைய
வேண்டுமென்பது கருத்து.
| 35 |
என்றான்
சூசை யென்றிரங்கி
யெரிதன்
னோய்காட்டி
நின்றா னவனைத் தழுவியழல்
நிகர்த்த
காமவிப்பத் |
|