பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 310

தன்றா ரையங்கண் ணீராட்டிச்
     சாற்றிக் காட்டியபுண்
ணன்றா யாற்று மருந்தன்ன
     நயந்தே மீண்டுரைத்தான்.
 

என்றான் சூசை; என்று இரங்கி, எரி தன் நோய் காட்டி
நின்றான் அவனைத் தழுவி, அழல் நிகர்த்த காம் அவிப்பத்
தன் தாமரை அம் கண்ணீர் ஆட்டி, சாற்றிக் காட்டிய புண்
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான்:


     என்று மேற்கண்டவாறு சூசை கூறினான்; என்று கூறியதோடு
அமையாது இரக்கங்கொண்டு, எரிக்கும் தன் நோயைக் காட்டி நின்ற
வாமனைத் தழுவி, நெருப்பைப் போன்ற காமத்தை அவிப்பதற்குத் தன்
கண்ணீர்த் தாரையால் அவனைக் குளிப்பாட்டி, சொல்லிக் காட்டிய
அப்புண்ணை நன்றாய் ஆற்றும் மருந்து போன்ற அறவுரையை
விருப்பத்தோடு மீண்டும் பின்வருமாறு தொடர்ந்து உரைத்தான்:

     காம் - 'காமம்' என்பதன் இடைக்குறை

          - விளம், - விளம், - மா, கூவிளம்

 
                36
கைவளர் மருத்துவ ரன்றிக் காய்ந்தநோய்
மெய்வளர் பிணியுள ரறிதல் வேண்டிலா
பொய்வள ருயிர்கொணோய் பொருந்திக் கொண்டனர்
மைவளர் நோயறிந் தலது மாறுமோ.
 
"கை வளர் மருத்துவர் அன்றி, காய்ந்த நோய்,
மெய் வளர் பிணி உளர் அறிதல் வேண்டிலா.
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்திக் கொண்டனர்
மை வளர் நோய் அறிந்து அலது மாறுமோ?

     "உடலில் வருத்துகின்ற நோயைக் கை நாடி பார்த்தலினால் தொழில்
வளர்க்கும் மருத்துவர் அறிதலேயன்றி, உடலில் வளர்ந்த நோயை உடையவர்
அறியவேண்டுவதில்லை. பொய்யின் அடிப்படையில் வளரும் உயிர் கொண்ட
நோயோ அந்நோய் பொருந்தக் கொண்டவர் தாமும் வளர்ந்த அந்நோயின்
கறை அளவு அறிந்து கொண்டாலன்றி மாறுமோ?