|
இது
உடல் நோய்க்கும் உயிர் நோய்க்கும் வேறுபாடு கூறியவாறு.
உடல் நோயை அறிதலும் மருந்து கொடுத்துத் தீர்த்தலும் மருத்துவன்
பொறுப்பில் அமைய, உயிர் நோயை நோய் வாய்ப்பட்டவனே அறிந்து
தீர்க்கும் வழியையும் தானே கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
| 37 |
புனஞ்செயும்
பங்கமே புனமொ ழித்தென
மனஞ்செயும் பங்கமு மனநொந் தாற்றலிற்
றினஞ்செயும் புகர்வினை தெரிகி லாரறத்
தினஞ்செயும் பயன்பட மீட்ட லேலுமோ. |
| |
|
"புனம் செயும்
பங்கமே புனம் ஒழித்து என,
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின்,
தினம் செயும் புகர் வினை தெரிகிலார் அறத்து
இனம் செயும் பயன் பட மீட்டல் ஏலுமோ?
|
"நீரால்
ஏற்படும் சேற்றை அந்நீரே ஒழிப்பது போல, மனத்தில்
ஏற்படும் பாவமும் மனம் வருந்துதலினால் தீரப் பெறும். ஆதலால், தாம்
நாளும் செய்யும் பாவச் செயலைப் பற்றியே தெரிந்து கொள்ள இயலாதவர்
அறத்திற்கு உறவாகத் தம்மைச் செய்யும் பயன் உண்டாகுமாறு
அப்பாவத்தினின்று தம்மை மீட்டுக் கொள்ள இயலுமோ?
| 38 |
நகைவழி விரகநோய்
வளர்ந்து நல்கிய
புகைவழி யுளத்திருள் பொதுளக் கொண்டநோய்த்
தொகை வழி யுணர்வரி தெனினுஞ் சூழ்ந்தவவ்
வகைவழி யறிதிநீ யறிந்து மாழ்கலேன். |
| |
"நகை வழி விரக
நோய் வளர்ந்து நல்கிய
புகை வழி உளத்து இருள் பொதுள, கொண்ட நோய்த்
தொகை வழி உணர்வு அரிது எனினும், சூழ்ந்த அவ்
வகைவழி அறிதி நீ. அறிந்தும் மாழ்கல் ஏன்? |
"இன்பத்தை
வாயிலாகக் கொண்டு காம நோய் வளர்ந்து தந்த
புகையின்மூலம் உள்ளத்தில் இருள் நிறைவதனால், கொண்ட நோயின்
தொகையையும் அது புகுந்த வழியையும் நூலறிவு இல்லாதவர் உணர்வது
அரிதெனினும், சூழ்ந்த அந்நோயின் வகையும் வழியும் நீ அறிவாய்.
அறிந்திருந்தும் மயங்குவது ஏன்?
|