|
"பக்கத்தில்
எழும் மாதர்தம் அழகு நலம் தந்த இன்பத்தினால்,
அவ்விடத்தில் எழும் ஆசை வெறுப்பதற்கு அரியதாகும் என்றாய்;
பக்கத்திலே கிடைக்கும் எட்டிப் பழத்தை விரும்பி உண்டு, அங்கே
தோன்றும் துன்பம் உறுங்காலத்து வருந்த முற்படுவது ஏன்?
பழன்
- 'பழம்' என்பதன் கடைப்போலி.
| 44 |
நெடிதுநா
ளுற்றநோய் மருந்தி னீர்மையாற்
கடிதுதீர் தரலருங் கரும மாமென்றாய்
நெடிதுநா ளுற்றநோய் நீள மீண்டுயிர்
கடிதுமாய்ந் தொழிதரக் கடுவுண் பாவதேன். |
| |
"நெடிது நாள்
உற்ற நோய் மருந்தின் நீர்மையால்
கடிது தீர் தரல் அருங் கருமம் ஆம் என்றாய்;
நெடிது நாள் உற்ற நோய் நீள, மீண்டு உயிர்
கடிது மாய்ந்து ஒழிதர, கடு உண்பு ஆவது ஏன்? |
"நீண்ட
நாளாகக் கொண்ட நோய் மருந்தின் தன்மையால் விரைவில்
தீருதல் என்பது அரிய செயலாகும் என்றாய்; நீண்ட நாளாகக் கொண்ட
நோய் இன்னும் நீளவும், மேலும் விரைவில் உயிரே மாய்ந்து ஒழியவும்,
நஞ்சை உண்பதற்கு முற்படுவது ஏன்?
| 45 |
கோட்பரு
மெழிலெனக் கோதை யார்முக
மீட்பரும் விடமதை விழித்துய் யாரென்றாய்
கோட்பரு மெழிலுயிர் குழைய நாடொறு
மீட்பரும் விளிவுற விழித்த லாவதேன். |
| |
"கோட்பு அரும்
எழில் எனக் கோதையார் முகம்
மீட்பு அரும் விடம்; அதை விழித்து உய்யார் என்றாய்.
கோட்பு அரும் எழில் உயிர் குழைய, நாள் தொறும்
மீட்பு அரும் விளிவு உற, விழித்தல் ஆவது ஏன்? |
"கொள்வதற்கு
அரிய அழகு என்னும் தன்மையால் மாலை போன்ற
மகளிர் முகம் மீட்பதற்கு அரிய நஞ்சு ஆகும்; அதை விழித்துப் பார்த்தவர்
உய்ய மாட்டார் என்றாய். கொள்வதற்கு அரிய அவ்வழகினால் உயிர்
குழையவும், நாள்தோறும் மீள்வதற்கு அரிய சாவை நெருங்கவும்,
அம்முகத்தை விழித்துப் பார்க்க முற்படுவது ஏன்?
|