| 46 |
மால்வளர்
விரகநோய் வழங்கும் போரதே
வேல்வளர் சமரினீ நோக்கல் வேண்டிலா
கோல்வளர் போர்வெலு மெதிர்த்த கோலிவண்
கால்வள ரோட்டமே வெற்றி காக்குமால் |
| |
"மால் வளர்
விரக நோய் வழங்கும் போர் அதே
வேல் வளர் சமரின் நீ நோக்கல் வேண்டு இலா.
கோல் வளர் போர் வெலும் எதிர்த்த கோல்; இவண்
கால் வளர் ஓட்டமே வெற்றி காக்கும் ஆல். |
"மயக்கத்தால்
வளரும் காம நோய் கொணரும் போராகிய அதனை நீ
வேலால் வளர்க்கும் போருக்கு ஒப்பாக நோக்குதல் வேண்டப் படாத
ஒன்றாம். எப்படியெனில், அம்பால் வளர்க்கும் போரில் எதிர்த்து நின்று
தாக்கிய அம்பே வெற்றி கொள்ளும்; இங்குக் காமப் போரிலோ தனது கால்
வளர்க்கும் ஓட்டமே வெற்றியைக் காக்கும்.
அம்புப் போரில் எதிர்த்து நின்று வெல்லுதலும்
காமப் போரில்
ஓட்டத்தின் அளவாக வெற்றி காணுதலும் இவற்றிடையே வேற்றுமையாம்.
இதே கருத்து 4;21ல் வருவதையும் அதன் அடிக் குறிப்பையும் காண்க.
| 47 |
பட்டிலாக்
கடையிலாப் பாவை யார்கட
மட்டிலா வுறுப்பெலாம் வதைசெய் நஞ்சென்றாய்
கிட்டிலாற் காண்கிலாற் கேட்கி லாலது
வெட்டிலாற் கொல்லுமோ வெயில்செய் பூணினாய். |
| |
"பட்டு இலாக்
கடை இலாப் பாவையார்கள் தம்
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய்;
கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது
வெட்டு இலால் கொல்லுமோ, வெயில் செய் பூணினாய்? |
"ஒளி
செய்யும் மணிப் பூண் அணிந்தவனே, கெடாமலும், முடியாமலும்
பாவை போன்ற மகளிர் தம் உறுப்புக்கள் எல்லாம் மட்டின்றி உயிரை
வதைக்கும் நஞ்சு என்று சொன்னாய்; நெருங்குதல் இல்லாமலும், அழகைக்
காணுதல் இல்லாமலும், மொழியைக் கேட்டல் இல்லாமலும், விரும்பாமலும்
விலகியிருந்தால் அந்நஞ்சு தானே வந்து கொல்லுமோ?
|