|
வெட்டு
- வேட்டு என்பதன் குறுக்கல் விகாரம்
| 48 |
வள்ளுறப்
பகைத்துயிர் வருத்து மெய்யலா
வள்ளுறக் கொடுமைகொண் டடும்பு றப்பகை
யுள்ளுறக் கண்முத லுள்ள வாயிலைந்
தெள்ளுறத் திறப்பதே னெரிசெய் வேலினோய். |
| |
"வள் உறப் பகைத்து
உயிர் வருத்தும் மெய் அலால்,
அள் உறக் கொடுமை கொண்டு அடும் புறப் பகை
உள் உறக் கண்முதல் உள்ள வாயில் ஐந்து
எள் உறத் திறப்பது ஏன், எரிசெய் வேலினோய்? |
"ஒளி
தருகின்ற வேலை உடையவனே, வலிமையோடு பகைத்து
உயிரை வருத்தும் தன் உடலாகிய உட்பகையும் அல்லாமல், நெருங்கிய
இடத்துக் கொடுமை கொண்டு தாக்கும் புறப்பகையும் உள்ளே புகுமாறு கண்
முதலாக உள்ள ஐந்து வாயில்களையும் இகழ்ச்சியுறத் திறந்து விடுவது ஏன்?
| 49 |
இருண்டிருங்
கனத்திடை யெரிந்த மின்னென
மருண்டிருண் டுயிர்கெட மயல்செய் வாண்முக
முருண்டுருண் டெறிந்தவெண் டலைய தோர்ந்துளந்
தெருண்டிருந் திமத்திடைக் காண்மின் றேறவே. |
| |
"இருண்ட இருங்
கனத்திடை எரிந்த மின் என
மருண்டு இருண்டு உயிர்கெட மயல்செய் வாள்முகம்
உருண்டு உருண்டு எறிந்த வெண்தலை; அது ஓர்ந்து உளம்
தெருண்டு இருந்து இமத்திடைக் காண்மின் தேறவே. |
"இருண்ட
பெரிய மேகத்தினிடையே ஒளிர்ந்த மின்னலைப் போல்
உயிர் மயங்கி இருண்டு கெடுமாறு மயக்கம் செய்யும் ஒளி பொருந்திய
மாதர்முகம் உயிர் பிரிந்தவிடத்து உருண்டு உருண்டு ஓடும்
மண்டையோடாய்க் காணப்படும். அதனை உணர்ந்து உள்ளம் தெளிந்து
தேறுமாறு சுடுகாட்டில் காண்பாயாக.
|