|
மேகத்திடையே
ஒளிர்ந்த மின்னலைக் கூறிய உவமானத்திற்குக்
கூந்தலோடு கூடிய முகமென உவமேயம் விரித்துக் கொள்க. அது
போலவே முகம் வெண்டலையாவதும் உயிர் பிரிந்து ஊன்
அழிந்தவிடத்து எனக் கொள்க. இருண்டிரும்
- 'இருண்ட + இரும்'
என்பதன் தொகுத்தல் விகாரம். 'ஈமம்' - 'இமம்' எனக் குறுக்கல்
விகாரம் பெற்றது.
| 50 |
பகைத்தகத்
துகிர்துறைப் படலை முத்தெனுந்
தகைத்தகப் பல்லிதழ் புதல்வில் தார்விழி
நகைத்தகப் பிறைநுத னளின வாயென
மிகைத்தகத் துகடரும் விழைந்த பொற்பிதோ. |
| |
|
"பகைத் தகத்
துகிர் துறைப் படலை முத்து எனும்
தகைத் தகப் பல் இதழ், புதல்வில், தார்விழி,
நகைத் தகப் பிறை நுதல், நளின வாய் என
மிகைத் தகத் துகள் தரும் விழைந்த பொற்பு இதோ!
|
"பகைமையில்
அழகு விளங்கப் பவளமும் கடல்துறையிற் கிடைக்கும்
முத்தைக் கோத்த மாலையும் என்று சொல்லும் தகைமைக்கு ஏற்ப அமைந்த
பல்லும் இதழும் எனவும், புருவமாகிய வில் எனவும், விண்மீனாகிய கண்
எனவும், ஒளியோடு உருவமும் ஒப்ப விளங்கும் பிறையாகிய நெற்றி எனவும்,
தாமரை மலராகிய வாய் எனவும் விரும்பிப் போற்றிய பாவத்தையே மிக்க
தகவோடு தரும் அழகெல்லாம் மண்டையோடு எண்ணத்தக்க இவ்வளவே
காண்!
செந்நிறப்
பவளமும் வெண்ணிற முத்தும் தம்முள் பகை நிறம்
கொண்டவை. துகிர் முத்து என ஒரு வரிசை காட்டி, பல் இதழ் என
மற்றொரு வரிசையில் எதிர் நிரல் நிறையாகத் தந்தவற்றை, இதழ் பல் என
மாற்றிக் கூட்டுக. தார்-விண்மீனைக் குறிக்கும் 'தாரை' என்ற சொல்
கடைக்குறையாய் நின்றது.
| 51 |
போதென மலர்ந்தெழில்
போதின் வாடியக்
கோதென மெலிவன மூப்புக் கொண்டகா
லீதென வுணர்கிலா தின்பம் வேண்டுவர்
தீதென விளைத்தபின் றீய தெய்துவார். |
|