|
உயர்ந்தோனாகிய
சூசை கருணை முகத்தோடு இவையும் இவை
போன்ற பலவும் ஒளி பெறும் தன்மையாய் உரைத்தான். உரைத்தவற்றை
அவ்வாமன் உணர்ந்த பின்னும், காற்றின் முகத்தே அலை எழுந்தாற்போல
மனத்துள் அலைந்தானேயன்றி, தெளிந்த முகமாக உறுதியோடு ஒரு
துணிவைத் தேர்ந்து கொள்ளாதவனாகவே அமைந்தான்.
கேய்பளின்
வரலாறு
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 54 |
கைக்குமோர்
மருந்து பாலர்
கனியவுண்
டுயிரு முண்ண
விக்குமோர் விளிம்பி னீவி
யிட்டென
வியம்ப லென்னோ
ஒக்குமோர் பழம்புண் ணாற்ற
வுடன்றழல்
வேண்டு மென்ன
வைக்குமோ ரளவில் விஞ்சை
மறைநலோன்
வகுத்தான் மீண்டே. |
| |
'கைக்கும் ஓர்
மருந்து பாலர் கனிய உண்டு, உயிரும் உண்ண
இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என, இயம்பல் என்னோ?
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற உடன்ற அழல் வேண்டும்' என்ன
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே: |
கணித்து
வைக்கும் ஓர் அளவில்லாத கல்வி நலம் வாய்ந்து வேத
நெறியில் ஒழுகும் நல்லோனாகிய சூசை, அவ்வாமன் துணியாத நிலைமை
கண்டு, 'கசக்கும் ஒரு மருந்தைச் சிறுவர் இனிதாக உண்பதன் மூலம்
உயிரும் அதனை உட்கொண்டு பயனடையுமாறு ஒரு விளிம்பில் சிறிதளவு
சருக்கரையும் தடவிக் கொடுத்தல் போல, இனிதாக இவனுக்குச்
சொல்வதனால் பயன் என்ன? பொருந்தியுள்ள ஒரு பழைய புண்ணை
ஆற்றச் சுடுகின்ற நெருப்பே வேண்டும்' என்று தனக்குள் கருதி மீண்டும்
சொல்லத் தொடங்கினான்.
உடன்றழல்
- உடன்ற + அழல் = உடன்றவழல் என வரவேண்டியதன்
தொகுத்தல் விகாரம்.
|