பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 323

பேய்முதிர் குலம்யா தோவப்
     பேய்கள்செய் தவனார் செய்த
நோய்முதிர் கருமம் யாதோ
     நுவன்றிவை பணியா யன்றார்.
 
"வீய் முதிர் மதுவின் தீம் சொல் விரித்த நூல் கல்வி மிக்கோய்,
தீய் முதிர் உணர்வின் தீய செருக்கொடு எம் உயிரை உண்ணும்
பேய் முதிர் குலம் யாதோ? அப் பேய்கள் செய்தவன் ஆர்?
செய்த நோய் முதிர் கருமம் யாதோ? நுவன்று இவை பணியாய்"
                                             என்றார்.

     "பூவில் முதிர்ந்த தேனைப் போல் இனிய சொற்களை விரித்துப்
பேசிய நூற் கல்வி மிக்கவனே, தீமை முதிர்ந்த உணர்வோடும் தீய
செருக்கோடும் எம் உயிரை உண்ணும் பேயின் பழமையான குலம்
யாதோ? அப்பேய்களைப் படைத்தவன் யார்? பேய்களாவதற்கு அவை
செய்த துன்பம் முதிர்ந்த செயல் யாதோ? இவற்றை முதலிற் சொல்லிப்
பின் யாம் செய்ய வேண்டியவற்றைக் கட்டளையிடுவாய்" என்றனர்.

     வீய், தீய் என்பன எதுகைப் பொருட்டு யகரம் பெற்றன.

 
                60
இனியவே கேட்டீ ரிந்நா
     ளெய்திய வுணர்விற் றாழ்ந்து
முனியவே மள்ளற் புக்கு
     முதிர்ந்தநோ யுணர்ந்து கூசிற்
கனியவே பொன்றுங் காலக்
     கனலுறா துவப்பீ ரென்னப்
பனியவே யலர்ச்செவ் வாயான்
     பணித்துமற் றிதனைச் சொன்னான்.
 
"இனியவே கேட்டீர். இந்நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து
முனிய வேம் அள்ளல் புக்கு முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின்,
கனியவே பொன்றுங் கால் அக் கனல் உறாது உவப்பீர்" என்னப்
பனிய வேய் அலர்ச் செவ் வாயான் பணித்து, மற்று இதனைச்
                                        சொன்னான்.