|
வழியைக்
குறிக்கும் 'அடைவு' என்னும் சொல் எதுகைப் பொருட்டு
'அடவு' என நின்றது.
| 64 |
விண்ணவ ரமர
ரும்பர்
மேலின
ரமுத ரையர்
பண்ணவர் வானோ ரென்னும்
பற்பெயர்
தகுவ தல்லாற்
றிண்ணவர் படைப்புண் டாகித்
தேவரென்
றுரைக்கல் வேண்டா
நண்ணவர் வணங்குந் தேவ
நாயகன்
றுணையற் றொன்றாம். |
| |
|
"விண்ணவர்,
அமரர், உம்பர், மேலினர், அமுதர், ஐயர்,
பண்ணவர், வானோர் என்னும் பல் பெயர் தகுவது; அல்லால்,
திண் அவர் படைப்பு உண்டு ஆகி, தேவர் என்று உரைக்கல் வேண்டா.
நண் அவர் வணங்கும் தேவ நாயகன் துணை அற்று ஒன்று ஆம்.
|
"விண்ணவர்
முதலாக வானோர் ஈறாகச் சொல்லப்பட்ட பல
பெயர்களும் அவ்வீரர்க்குப் பொருந்துவதாம்; அல்லாமல், உறுதி வாய்ந்த
அவர்களும் படைப்பினால் உண்டாகியுள்ளமையால், அவர்களைத் தேவர்
என்ற பெயரால் அழைத்தல் வேண்டாம். அணுகி நின்ற அவர்களும்
வணங்கும் தலைவனாகிய கடவுள் தனக்கு இணையேயின்றி ஒருவனே
ஆவான்.
இது
விண்ணவர் முதலாகச் சொல்லப்பட்ட பெயர்கள் வேறுபாடின்றி
முப்பத்து முக்கோடித் தேவர்க்கும் வழங்குவதனை விலக்கி, கடவுள்
ஒருவனே தேவன், பிறர் அல்லர் என்றது.
| 65 |
வானுறை குலத்தோராகி
வரங்களும்
வயமு மிக்கார்
கோனுறை கோயில் வைகிக்
கோத்தண
மென்னத் தோன்றிற் |
|