பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 329

          68
திருத்தகுந் தேவ ரென்று
     செயிர்தகு நுமது காமத்
துருத்தகுங் கதைகள் வீக்கி
     யுளத்துளை விரக நோயிற்
கருத்தகும் வினைகள் பாவிக்
     கைப்படை பலவுந் தோற்றிச்
செருத்தகும் பகையுந் தம்மிற்
     றிளைத்துள மெலிவா ரென்பீர்.
 
திருத் தகும் தேவர் என்று, செயிர் தகும் நுமது காமத்து
உருத் தகும் கதைகள் வீக்கி, உளத்து உளைவிரக நோயின்
கருத் தகும் வினைகள் பாவி, கைப் படை பலவும் தோற்றி,
செருத் தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர்.

     "புனிதத்திற்கு உகந்த தேவர் என்று அவர்களைச் சொல்லிக்
கொண்டே, பாவம் எனத் தகும் உங்கள் காமத்திற்கு உருவங் கொடுத்தது
போன்ற கதைகளை அவர்கள் மீது கட்டி, உள்ளத்தில் வருத்தும் காம
நோயினால் கருவுறுதல் வரையிற் செல்லும் செயல்களை அவர்கள்மீது ஏற்றி,
கைகளில் பல கருவிகளும் தோன்றக் கொடுத்து, போரிடத் தகும் பகையும்
தமக்குள் நிறைய விளைவித்து, தோல்வியில் உள்ளம் மெலிவார்
என்றெல்லாம் சொல்லி வைப்பீர்.

 
             69
சிட்டிடை வானின் றுங்கட்
     டேவர்பொன் னுலகந் தன்னி
னெட்டிடை நெறிக ணீண்ட
     நெற்றியங் குன்றங் குன்றா
மொட்டிடை மலர்ந்த பொய்கை
     மொய்திரைக் கங்கை கான்விள்
மட்டிடை மலர்ந்த சோலை
     வகுத்துமண் ணொப்பச் சொல்வீர்.
 
"சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில்
நெட்டு இடை நெறிகள், நீண்ட நெற்றி அம் குன்றம், குன்றா