மொட்டு இடை
மலர்ந்த பொய்கை, மொய் திரைக் கங்கை, கான்விள்
மட்டு இடை மலர்ந்த சோலை வகுத்து மண் ஒப்பச் சொல்வீர். |
"பெருமைக்குரிய
இடம் பரந்த வானுலகில் நிலைபெற்ற உங்கள்
தேவர்களுக்கு உரிய பொன்னுலகத்தில் நெடிய இடமுள்ள பாதைகள், நீண்ட
சிகரமுள்ள அழகிய மலைகள், வளம் குறையாது மொட்டுக்கள்
இடையிடையே மலர்ந்த தடாகங்கள், அலைகள் மொய்த்த கங்கை, மணம்
பரப்பும் தேனோடு மலர்ந்த சோலைகள் இவையெல்லாம் மண்ணுலகிற்கு நிகராகக் கொண்டு
வகுத்துச் சொல்வீர்.
நின்ற
+ உங்கள் - 'நின்றவுங்கள்' என வரவேண்டியது 'நின்றுங்கள்'
எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.
| 70 |
இனையவே பலவுங்
கூறி
யிருவிழிக்
குருடர் யானை
யனையவே முசலந் திண்கை
யடியுரல்
செவிகள் சூர்ப்பம்
வனையவே யுரைத்த வண்ணம்
வடுமனுக்
குலத்தின் சாயல்
புனையவே யுயர்ந்த வானோர்ப்
புன்மையில்
வனைத னன்றோ. |
| |
"இனையவே பலவும்
கூறி, இரு விழிக் குருடர் யானை
அனையவே, முசலம் திண் கை, அடி உரல், செவிகள் சூர்ப்பம்
வனையவே உரைத்த வண்ணம், வடு மனுக் குலத்தின் சாயல்
புனையவே உயர்ந்த வானோர்ப் புன்மையில் வனைதல் நன்றோ? |
"இவை
போன்ற பலவற்றையும் கூறி, இரு கண் குருடரும் யானையும்
என்ற கதை போலவே, யானையின் உறுதியான துதிக்கை உலக்கை எனவும்,
காலை உரல் எனவும், செவிகளைச் சுளகு எனவும் கற்பனை செய்து
உரைத்த வண்ணம், குற்றமுள்ள மனித இனத்தின் சாயலாகப் புனைந்து
உயர்ந்த வானவரைச் சிறுமையோடு உருவமாகச் செய்து காட்டுதல் நன்றோ?
|