|
கூட்டத்தை உருவாக்கியது
என்று உணர்வீர். உணர்ந்து, தீவினை
உள்ளத்துள் புகுந்தால் விளையும் பகையையும் அறிந்து கொள்ளுங்கள்"
என்று சூசை முடித்துச் சொன்னான்.
| 74 |
வானவ ராக
வான்மேல்
வாழ்ந்தநல்
லுயிர்கள் கெட்டுத்
தானவ ராகச் செய்த
தகுதிமேற்
கொடிய பாவ
மூனவ ரெமைப்ப கைத்தா
லுறுஞ்சிதை
வளவோ வென்றாங்
கானவ ரஞ்சிக் கூற
வருந்தவ
னினைய சொன்னான். |
| |
"வானவர் ஆக
வான்மேல் வாழ்ந்த நல் உயிர்கள் கெட்டுத்
தானவர் ஆகச் செய்த தகுதி மேல், கொடிய பாவம்
ஊன் அவர் எமைப் பகைத்தால் உறும் சிதைவு அளவோ?" என்று
ஆங்கு
ஆனவர் அஞ்சிக் கூற, அருந் தவன் இனைய சொன்னான்: |
"வானவராக
வானுலகத்தில் வாழ்ந்த நல்ல உயிர்களே இவ்வாறு
கெட்டு அசுரர் ஆகுமாறு செய்த தன்மையை அறிந்த தன் மேல், உடல்
உள்ளவராகிய எம்மைக் கொடிய பாவம் பகைத்து வந்து அணுகினால்
ஏற்படும் அழிவு அளவில் அடங்குவதோ?" என அங்கு இருந்தோர் அஞ்சிக்
கூறக் கேட்டு, அரியதவத்தோனாகிய சூசை பின்வரும் இவற்றைத்
தொடர்ந்து சொல்லலானான்:
பேயும்
நரகமும்
-
- காய், - - காய், - - காய், - - காய்
| 75 |
வானவரை
யுரைக்குங்கால்
வாய்மையற
வுணர்ந்ததுபோ
றானவரை யென்னுங்காற்
றடநீங்கி
மயல்வேண்டா
மானவரை வேறெண்ணி
யழற்கிடக்கும்
வெறிவேறாய்
நூனவரை மறைவிதித்த
நன்னூலா
லெண்ணேனே. |
|