"வானவரை உரைக்குங்
கால் வாய்மை அற உணர்ந்தது போல்,
தானவரை என்னுங் கால் தடம் நீங்கி மயல் வேண்டாம்.
ஆனவரை வேறு எண்ணி அழல் கிடக்கும் வெறி வேறு ஆய்
நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே. |
"வானவரைப்
பற்றிப் பேசியபோது உண்மைக்கு மாறாகத் தேவரென்று
நீங்கள் உணர்ந்ததுபோல், அசுரரைப்பற்றி உரைக்கும் போதும் வழி தப்பி
மயங்குதல் வேண்டாம். நான் அவ்விரு வகையாரையும் வேதம் விதித்த
நல்ல நூலின் அடிப்படையில், அசுரரெனும் அவரை வேறாக எண்ணி நரக
நெருப்பிற் கிடக்கும் பேயை வேறாக எண்ணேன்.
எனவே,
பிற சமய நெறிப்படி பேயும் அசுரரும் வேறெனக்
கொண்டாலும், வேத நூல் நெறிப்படி அவ்விருவரையும் ஒன்றே என்றவாறு.
இம் 'மருள்' பின் 77-ம் பாடலில் விளக்கம், பெறுகிறது.
| 76 |
விண்ணோர்க்குப்
பகைசெய்து வெல்லறியா வறங்குன்ற
மண்ணோர்க்கு வினைசெய்து மண்ணுயிர்க ணரகுய்ப்பப்
புண்ணோய்க்கு வைத்தனதீப் புழுங்குமெனத் தாங்கதிநீத்
துண்ணோய்க்குத் தகப்பகையோர்ந் துயிரடுந்தீ துணர்குலமே. |
| |
"விண்ணோர்க்குப்
பகைசெய்து வெல் அறியா, அறம் குன்ற
மண்ணோர்க்கு வினைசெய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப,
புண் நோய்க்கு வைத்தன தீ புகுங்கும் என, தாம் கதி நீத்து
உண் நோய்க்குத் தகப் பகை ஓர்ந்து உயிர் அடும் தீது
உணர்குலமே. |
"அப்
பேய்க் குலம் வானவர் மீது பகை கொண்டு அவர்களை லெல்ல
இயலாமல், அறம் குன்றுமாறு மண்ணுலகத்தவர்க்கு வினை செய்து மனித
உயிர்களை நரகத்திற் கொண்டு சேர்க்குமாறு, நோயாகிய புண்ணுக்கு மேல்
வைத்த தீ கொதிப்பது போல, தாம் வானுலகக் கதியை இழந்து
அனுபவிக்கும் துன்பத்திற்குத் தக்கவாறு பகையுணர்வு கொண்டு மனித
உயிர்களை வாட்டும் தீங்கு உணர்ந்த குலமாகும்.
|