| 77 |
நற்செய்கை
யனைத்துமற நலம்பகைத்தோர் தூயதவந்
தற்செய்கை நெடுநாளுந் தாமுடிப்ப வரம்பெற்று,
விற்செய்கை யமர்பூட்டி விண்ணவரைம் புண்படுத்தி,
மற்செய்கை வழங்கசுர ரென்றறைதல் மருளன்றோ. |
| |
|
"நல் செய்கை
அனைத்தும் அற நலம் பகைத்தோர், தூய நலம்
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று,
வில் செய்கை அமர் பூட்டி விண்ணவரைப் புண்படுத்தி,
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ?
|
"நல்ல
செயல் அனைத்தும் அற்றவராய் நன்மையைப் பகைத்தோர்,
தூய தவத்தை இயல்பான செய்கையாகத் தாம் நெடுதாள் முடித்தமையால்
வரம் பெற்று, அவ்வரத்தால் செய்யும் போரில் வில்லைப்பூட்டி வானவரைப்
புண்படுத்தி, இவ்வாறு போர்த்தொழில் செய்யும் அசுரர் ஆவார் என்று
கூறுதல் மயக்கம் அன்றோ.
| 78 |
வீடிழந்த
தீயினமே விளைத்தசெருக் குளத்தொழியாப்
பீடிழந்த தன்மையெரி பிளிர்ந்திடித்துப் பிளந்தமுகி
னீடிழந்த வசனிகள்போ னீதிபரன் வயப்பயத்தாற்
சேடிழந்த நரகூழித் தீவீழ்ந்தது புதைத்தனவே. |
| |
"வீடி இழந்த
தீ இனமே விளைந்த செருக்கு உளத்து ஒழியா,
வீடு இழந்த தன்மை, எரி பிளிர்ந்து இடித்துப் பிளந்த முகில்
நீடு இழந்த அசனிகள் போல், நீதி பரன் வயப் பயத்தால்
சேடு இழந்த நரகு ஊழித்தீ வீழ்ந்து புதைந்தனவே. |
"வான்
வீட்டை இழந்த தீய பேய்க் கூட்டம் மனத்துள் விளைவித்த
அகந்தை ஒழியாமல், பெருமை இழந்த தன்மையாக, நெருப்பைச் சிதறி
இடித்துப் பிளந்த மேகத்தினின்று நெடுந்தூரம் பிரிந்து வந்த இடிகள்
போல், நீதியுள்ள ஆண்டவனின் வல்லமையின் பயனாக நன்மையொன்றும்
இல்லாத நரகத்து ஊழிக்கால நெருப்பில் விழுந்து புதைந்தன.
|