பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 338

     அடும் பாவம் - சாவு தரும் பாவம்: ஆன்மாவைக் கொன்ற
தன்மையாய் நரகத்திற்கு ஆளாக்கும் பாவம்.

 
                    83
விய்த்துணையு மகித்துணையும் வேழமுட னரித்துணையுந்
தீய்த்துணையுஞ் செயிர்த்துணையுஞ் சீறியதீ யோர்துணையு
நோய்த்துணையுஞ் சினத்துணையு நூறியடித் துரஞ்சினந்த
பேய்த்துணையு மன்றிநலம் பெறுந்துணையற் றிருப்பரிதே.
 
"வீய்த் துணையும், அகித் துணையும், வேழமுடன் அரித் துணையும்,
தீய்த் துணையும், செயிர்த் துணையும், சீறிய தீயோர் துணையும்,
நோய்த் துணையும், சினத் துணையும், நூறி அடித்து உரம் சினந்த
பேய்த் துணையும் அன்றி, நலம் பெறும் துணை அற்று, இருப்பு அரிதே.

     "வேங்கையின் துணையும், பாம்பின் துணையும், யானையோடு
சிங்கத்தின் துணையும், தீயின் துணையும், பாவத்தின் துணையும்,
ஒருவரோடொருவர் சீறிய தீயோர் துணையும், நோயின் துணையும்,
சினத்தின் துணையும், தாக்கி அடித்து வலுவோடு சினந்த பேயின் துணையும்
அல்லாமல், நலம் பெறுவதற்கான துணையே அற்று, இருப்பதற்கு அரியதாம்
அந்நகரம்.

 
                              84
புல்லவையே பூரியராய்ப் புழுங்கியவெஞ் சினத்தினராய்க்
கொல்லவையே குணுங்கினங்கள் கொந்தழலிற் சீறியுடன்
றல்லவையே செவிகேட்ப தல்லதடுந் துயராற்ற
நல்லவையே யொன்றுரைக்கு நற்றுணையற் றிருப்பரிதே.
 
"புல்லு அவையே பூரியராய், புழுங்கிய வெஞ் சினத் தினராய்,
கொல் அவையே குணுங்கு இனங்கள் கொந்து அழலின் சீறி உடன்று,
அல்லவையே செவி கேட்பது அல்லது, அடும் துயர் ஆற்ற
நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று, இருப்பு அரிதே.