பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 339

     "கூடியுள்ள கூட்டமோ ஈனர் கூட்டமாய், அவர்களும்
ஒருவரோடொருவர் புழுங்கிய சினம் உடையவராய், கொல்லும் கூட்டமாகப்
பேய் இனங்கள் கொத்தான நெருப்புப் போல் சீறித் தாக்குவனவாய், நன்மை
அல்லாத வற்றையே செவியாற் கேட்பதல்லாமல், வாட்டும் துயரத்தைத்
தணிக்க நல்லவை ஒன்றேனும் உரைக்கும் நல்ல துணையே அற்று,
இருப்பதற்கு அரியதாம் அந்நகரம்.

 
                                85
இத்துணைகொண் டுளமாழ்கி யெய்தியதன் செயிர்செய்யு
மத்துணைகொண் டொழியாதா லலைந்தலைந்துட் டுயர்பொங்க
மைத்துணைகொண் டிருண்டபுகை மண்டியெழு மிருட்சிறையாய்
மொய்த்துணைகொண் டெரிப்பீடை முறைமொழிவ கேண்மினரோ.
 
"இத் துணை கொண்டு உளம் மாழ்கி, எய்திய தன் செயிர் செய்யும்
அத் துணை கொண்டு ஒழியாதால் அலைந்து உள்துயர் பொங்க,
மைத் துணை கொண்டு, இருண்ட புகை மண்டி எழும் இருள்
                                             சிறையாய்
மொய்த் துணை கொண்டு, எரிப் பீடை முறை மொழிவ கேண்மின்
                                             அரோ:

     "இத்தகைய துணையைக் கொண்டு மனம் மயங்கி, தான் செய்து
கொண்டுள்ள பாவம் செய்யும் துன்பத் துணை எவ்வகை கொண்டும்
ஒழியாத தன்மையால் அங்குமிங்கும் அலைந்தும் உள்ளத்தில் துயரம்
பொங்க, இருளைத் துணையாகக் கொண்டு, இருண்ட புகை மண்டி எழும்
இருள் நிறைந்த சிறையாகி, விடாப் போராட்டத்தையே துணையாகக்
கொண்டு, அந்நரகத்தில் நெருப்பினால் விளையும் துன்பத்தையும் முறையாக
நான் தொடர்ந்து சொல்லக் கேளுங்கள்:

                    நரக நெருப்பின் கொடுமை

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா

 
               86
நோய்நிலை நிரையங் கொண்டபற் பீழை
     நுதலினுட் பனிப்பவே யூழித்
தீய்நிலை யென்றா லுதவிய வின்ன
      தீயென வுணர்தலும் வேண்டா