"ஆதி தன் அருள்
இத் தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின்
படைத்து,
நீதி தன் மலிந்த சினத் திறம் காட்டி நெறி தவிர் தீயரைத் தீய்க்கப்
பூதி தன் அழலைப் படைத்தனன் என்றால், பொருவ இவ் இரு
தழல்
நோக்கின்,
சோதி தன் முகத்து மின்மினி போன்று அச்சுடர் முகத்து இச் சுடர்
நிலையே.
|
"ஆதி
இறைவன் அருள் கொண்டு இவ்வுலக நெருப்பை
நல்லவர்க்குமாகத் தன் அன்பினால் உதவியாகப் படைத்து, தன் நீதி மலிந்த
சினத் திறத்தைக் காட்டி நெறி கெட்ட தீயவரைத் தீய்க்க நரகத்தின்
நெருப்பைப் படைத்தான். ஆகவே, இவ்விரு நெருப்பையும் ஒப்பிட்டு
நோக்கினால், பகலவன் முன் மின் மினி போன்று, அந்த நரக நெருப்பின்
முன் இவ்வுலக நெருப்பின் நிலை அமையும்.
| 88 |
பொறிப்படப்
புழுங்கிக் கொழுந்துவிட் டெரிந்து
புகைத்திர
ளிருண்டெழ மண்டி
நெறிப்படச் சுடராச் சுடச்சுடச் செந்தீ நீறுமா
காதெலாம
வெந்து
குறிப்படப் புணர்ந்த செயிரள வுடற்றிக்
குடைந்துடல்
கிழித்தவாய் புக்குச்
செறிப்படத் திரண்டு வெளிப்படக் கண்வாய்
செவிகள்மூக்
கெரியுமிழ்ந் தெரிவார். |
| |
"பொறிப் படப்
புழுங்கி, கொழுந்து விட்டு எரிந்து, புகைத் திரள்
இருண்டு எழ மண்டி
நெறிப் படச் சுடரா, சுடச் சுடச் செந்தீ நீறும் ஆகாது எலாம் வெந்து,
குறிப்படப் புணர்ந்த செயிர் அளவு உடற்றி, குடைந்து உடல் கிழித்த வாய்
புக்கு,
செறிப் படத் திரண்டு, வெளிப்படக் கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து
எரிவார். |
"தீப்பொறி
சிதறச் சினந்து, கொழுந்து விட்டு எரிந்து, புகைக் கூட்டம்
இருண்டு எழுந்து மண்டுவதனால் முறைப்படி ஒளிராமல், சுடச் சுடச் செந்நிற
நெருப்பு சாம்பலும் ஆகாமலே எல்லாம் வேகச் செய்து, குறி வைத்த
|