பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 342

தன்மையாய் ஒவ்வொருவனிடமும் பொருந்தியுள்ள பாவத்தின் அளவுக்கு
ஏற்ப வாட்டி, உடல் உள்ளே குடைந்து கிழித்த வாய் வழியாக நெருப்பு
உள்ளே புகுந்து, செறிவுபட உள்ளே திரண்டு, பின் வெளிப்படுவதற்குக்
கண்வாய் செவிகள் மூக்கு வழியாக நெருப்பை உமிழ்ந்து, இவ்வாறு
அங்குள்ளவர் எரிவர்.

 
                   89
படுப்பதற் கமைந்த பூவணை தீயே
     படும்பசிக் குணவுக டீயே
யுடுப்பதற் கணியுங் கலிங்கமுந் தீயே
     யுயிர்ப்புளி யாவியுந் தீயே
கடுப்பதற் கெரிந்த தீப்புன லாட்டிக்
     கனற்கட னீங்கில நீந்தி
யடுப்பதற் கணையுங் காண்கில மூழ்கி
     யலைந்தலைந் தெரிந்துளைந் தயர்வார்.
 
"படுப்பதற்கு அமைந்த பூ அணை தீயே; படும் பசிக்கு உணவுகள்
                                தீயே;
உடுப்பதற்கு அணியும் கலிங்கமும் தீயே; உயிர்ப்பு உளி ஆவியும்
                               தீயே;
கடுப்பதற்கு எரிந்த தீப்புனல் ஆட்டி, கனல் கடல் நீங்குஇல நீந்தி,
அடுப்பதற்கு அணையும் காண்கு இல மூழ்கி, அலைந்து அலைந்து,
                               எரிந்து உலைந்து அயர்வார்.

     அவர்கள் படுப்பதற்கென்று அமைந்த பூ மெத்தையும் தீயே;
கொள்ளும் பசிக்கு உணவு வகைகளும் தீயே; உடுப்பதற்கென்று அணிந்து
கொள்ளும் ஆடையும் தீயே; மூச்சுவிடும்போது வெளிப்படும் ஆவியும்
தீயே. வெப்பம் மிகும்படி எரிந்த தீயாகிய நீரில் உடலைக் குளிப்பாட்டி,
நெருப்புக் கடலில் நீங்காது நீந்தி, அடுத்துத் தங்குவதற்குக் கரையும் காண
இயலாது அதனுள்ளே மூழ்கி, அங்கும் இங்கும் அலைந்து, எங்கும் எரிந்தும்
வருந்தியும் சோர்வர்.

 
                   90
சூளையி லடுக்கித் துறுவிய கல்லோ
     சுழன்றன பூட்டையிற் றிலமோ
முளையிற் புதைமுட் பிணங்கலோ நாணி
     முறுக்கதோ கதிரினுட் கழையோ