பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 343

பாளையிற் றுவன்ற முகைகளோ தம்மிற்
     பதைப்பவுண் ணெருங்கிய தன்மை
பூளையி னொய்யங் குரம்பையர் பிறழா
     புதவெரி புதைத்துவெந் தெரிவார்.
 
"சூளையில் அடுக்கித் துறுவிய கல்லோ, சுழன்றன பூட்டையில்
                                        திலமோ,
மூளையில் புதைமுள் பிணங்கலோ, நாணி முறுக்கு அதோ, கதிரினுள்
                                        கழையோ,
பாளையில் துவன்ற முகைகளோ தம்மில் பதைப்ப உள் நெருங்கிய
                                        தன்மை
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா, புதவு எரி புதைத்து
                                        வெந்து எரிவார்.

     "இலவம் பஞ்சினும் நொய்தான அழகிய உடலை உடையோர்
சூளையில் அடுக்கி நெருங்கிய செங்கற்களோ, சுழன்ற செக்கினுள் எள்ளோ,
சேற்றில் புதைந்த முள்ளின் பின்னலோ, நாணின் முறுக்கோ, ஆலையினுள்
கரும்போ, தென்னம் பாளையில் செறிந்த அரும்புகளோ என்று சொல்லுமாறு
தமக்குள்ளே பதைத்து உள்ளே ஒருவரோடொருவர் நெருங்கிய தன்மை
பிறழாமல், நரக நெருப்பில் புதைக்கப்பட்டு வெந்து எரிவர்.

 
                  91
தூய்வளர் மலர்ப்பூஞ் சேக்கையைப் பரப்பிச்
     சூழகி னறும்புகை தோய்த்து
மீய்வளர் செல்வோர் விளைத்ததஞ் செயிரின்
     வினையினா னரகுறீஇ யங்கண்
டீய்வளர் சுள்ளை புதைத்துளி கால்கை
     திருப்பவு நீட்டவு மாற்றா
நோய்வளர் வண்ண நூல்வள ருரையா
     னுதலிநா னியம்பிட றேற்றேன்.
 
"தூய் வளர் மலர்ப் பூஞ் சேக்கையைப் பரப்பி, சூழ் அகில் நறும்
                                   புகை தோய்த்து
மீய்வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் விளையினால் நரகு
                                   உறீஇ, அங்கண்
தீய் வளர் சுள்ளை புதைத்த உளி கால் கை திருப்பவும் நீட்டவும்
                                   ஆற்றா
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான்
                                   இயம்பிடல் தேற்றேன்.