| 93 |
சொரிவன
மழைபோ லழல்விட வொருபால்
தோலுரித்
தெரிப்பன வொருபா
லெரிவன வணைமேல் விரிப்பன வொருபா
லீயநீ
ராட்டுவ தொருபால்
கரிவன வுடல்க டுமிப்பன வொருபால்
கனற்றிர
ளூட்டுவ தொருபால்
திரிவன வுருவால் வெருட்டுவ தொருபால்
தேறில
பகைத்தன பேயே. |
| |
|
"சொரிவன மழை
போல் அழல் விட ஒரு பால், தோல் உரித்து
எரிப்பன
ஒரு பால்;
எரிவன அணை மேல் விரிப்பன ஒரு பால், ஈய நீர் ஆட்டுவது
ஒரு
பால்;
கரிவன உடல்கள் துமிப்பன ஒரு பால், கனல் திரள் ஊட்டுவது
ஒரு
பால்;
திரிவன உருவால் வெருட்டுவது ஒரு பால், தேறு இல பகைத்தன
பேயே.
|
"தேறாத
தன்மையாய் மனிதரைப் பகைத்த பேய்கள் ஒரு பக்கம்
சொரியும் மழை போல் நெருப்பைத் தூவிக் கொண்டிருக்க, மற்றொரு
பக்கம் அவர்கள் தோலை உரித்து எரித்துக் கொண்டிருக்கும்; ஒரு பக்கம்
எரியும் மெத்தைமேல் அவர்களை நீட்டிப் படுக்க வைத்து, மற்றொரு பக்கம்
உருகிய ஈய நீரால் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்; ஒரு பக்கம் கரிந்து
கொண்டிருக்கும் உடல்களைத் துண்டுபடுத்திக் கொண்டிருக்க, மற்றொரு
பக்கம் தீத் திரளை உணவாக ஊட்டிக் கொண்டிருக்கும்; மற்றொரு
பக்கமோ அவை அலைந்து திரியும் உருவத் தோற்றத்தால் அவர்களை
அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.
| 94 |
வாசநெய்
யென்ன வுருக்கிய வீயம்
வலித்துட
லொருங்குடன் பூசிக்
கோசர நீரென் றழற்புன லாட்டிக்
கொந்தெரிச்
சயமெய்ப்பை போர்த்துப்
பூசண மாக நச்சர வணிந்து
பூந்தவி
சுச்சிவாழ் கென்ன
வீசழல் விரிந்த மஞ்சமே லிருத்தி
விரகரை
வருத்துவ தன்றோ |
|