|
தீப்பொறி படர்த்
தீக் கொழுந்தினால் பழுக்கக் காய்ந்த வளைந்த இரும்புத்
துறட்டியால் உடல் முழுவதும் கிழித்து, இதுவே நெருங்கிப் படர்ந்த காம
நோய்க்கு மருந்து என்று பேய்கள் சினந்து துன்பம் செய்யும்.
| 96 |
அள்ளுமா றிருண்ட
புகைதுறுஞ் சிறையூ
டலகைகள்
வருத்திய வண்ண
முள்ளுமா றகன்று நூலினா றகன்றாங்
குறைந்தவர்
பொறுக்குமா றகன்று
தெள்ளுமா றகன்றீங் கவனவன் செய்த
செயிரள
வாகுலித் தங்க
ணெள்ளுமா றியற்றுந் தீவினை செய்யு
மிரும்பகை
யன்றுதோன் றுவதே. |
| |
"அள்ளும் ஆறு
இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள்
வருத்திய
வண்ணம்
உள்ளும் ஆறு அகன்று, நூலின் ஆறு அகன்று, ஆங்கு உறைந்தவர்
பொறுக்கும்
ஆறு அகன்று,
தெள்ளும் ஆறு அகன்று, ஈங்கு அவனவன் செய்த செயிர் அளவு
ஆகுலித்து,
அங்கண்
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று
தோன்றுவதே.
|
"கையால்
அள்ளிக் கொள்ளும் விதமாய் இருண்ட புகை செறியும்
நரகச் சிறையின் ஊடே பேய்கள் துன்புறுத்தும் தன்மை நினைக்கும் விதமும்
கடந்து, நூலால் கற்று உணரும் தன்மையும் கடந்து, அங்குத் தங்கியவர்
தாங்கிக் கொள்ளும் தன்மையும் கடந்து, எவ்வகையாலும் தெளிவு பெறும்
விதமும் கடந்து, இவ்வுலகில் அவனவன் செய்த பாவத்தின் அளவுக்கு ஏற்ப
வருத்தமுற்று, அங்கு எவரும் இகழத் தக்கவிதமாய்ச் செய்யும் தீய
செயல்கள் தரும் பெரிய பகையின் கொடுமை நரகத்தைச் சென்று சேர்ந்த
அன்றே உள்ளவாறு தோன்றுவதாம்.
|