|
ஐம்பொறி
வாதனை
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
| 97 |
மெய்மு தற்பொறி
யைந்தொடு மேவிய
பொய்மு தற்புரை பூரியர் பூத்தென
வைமு தற்பொறி யின்வழி யாங்கதிர்
மொய்மு தற்புத வாகுல மொய்க்குமே. |
| |
"மெய் முதல்
பொறி ஐந்தொடு மேவிய
பொய் முதல் புரை பூரியர் பூத்து என,
ஐ முதல் பொறியின் வழி ஆங்கு அதிர்
மொய் முதல் புதவு ஆகுலம் மொய்க்குமே. |
"மெய்
முதலிய ஐம்பொறிகளோடு இணங்கி நடந்த பொய்யின்
வழியாகப் பாவிகளிடம் பாவம் தோன்றியமையால், நரகத்தில் இவ்வைந்து
மூலப் பொறிகளின் வழியாக அதிரச் செய்யும் போரின் மூலம்
அங்குத்துயரம் அவர்கள் மேல் மொய்க்கும்.
| 98 |
நாறு பூம்புகை
நாறும கிற்புகை
யூறு நானமற் றூறிய வாசமோ
டேறு காமம்வ ளர்த்தவி யற்கையாற்
பாறு பூதிப டர்கடன் மூழ்குவார். |
| |
"நாறு
பூம் புகை, நாறும்
அகில் புகை,
ஊறு நானம், மற்று ஊறிய வாசமோடு
ஏறு காமம் வளர்த்த இயற்கையால்,
பாறு பூதி படர் கடல் மூழ்குவார். |
"மணம்
தரும் மெல்லிய சாம்பிராணிப் புகை, வெந்து மணக்கும்
அகிற்புகை, பூனையிடம் ஊறும் புனுகு, மற்றும் நெய்யாக ஊறிய நறுமணப்
பொருள்களோடு பெருகுகின்ற காமத்தை வளர்த்துக் கொண்ட இயல்பினால்,
வறண்ட கெட்ட நாற்றம் வீசும் நரகக் கடலில் அத்தகைய பாவம் செய்தோர்
மூழ்குவர்.
|