| 99 |
பூதி நாறுபு
கைத்திர ணாசியூ
டூதி யூதி யுலகமு லாமல
மாதி நாறுமி யாவும லைக்கொடு
மோதி மோதவு டீயரு மூழ்குவார். |
| |
'பூதி நாறு புகைத்திரள்
நாசி ஊடு
ஊதி ஊதி, உலகம் உலாம் மலம்
ஆதி நாறும் யாவும் அலைக் கொடு
மோதி மோத, உள் தீயரும் முழ்குவார். |
"கெட்ட
மணம் வீசும் புகைத்திரளை மூக்கின் வழியாக வெளியே
ஊதி ஊதி, உலகத்தில் பொருந்தியுள்ள மலம் முதலாக நாறக்கூடிய யாவும்
அலைபோல் திரண்டு தம்மீது விடாது மோத, தீய பாவிகளும் அதனுள்ளே
மூழ்கிக் கிடப்பர்.
நாறும்
+ யாவும் என்பது புணர்ச்சியில் 'நாறுமியாவும்' என வந்தது.
| 100 |
கோதின்
வாயுளங் கோடவின் பென்றடுந்
தீதின் வாய்வளர் தீயுரை கேட்டன
காதின் வாய்கடுங் கோல்கடுத் தேற்றிய
போதின் வாய்வழி பொங்கழ லூற்றுமால். |
| |
"கோதின் வாய்
உளம் கோடல் இன்பு என்று, அடும்
தீதின் வாய் வளர் தீ உரை கேட்டன
காதின் வாய் கடுங் கோல் கடுத்து ஏற்றிய
போதின், வாய் வழி பொங்கு அழல் ஊற்றும் ஆல். |
"பாவத்தின்
பக்கம் உள்ளம் கோணிச் செல்லுதல் இன்பமென்று கருதி,
கொல்வதற் கொத்த தீமையுள்ள பிறர் வாயினின்று பிறக்கும்
கெட்டபேச்சைக் கேட்ட காதுகளில் பேய் சூட்டுக்கோலைச் சினந்து
ஏற்றியபோது, உள்ளே பொங்கும் நெருப்பு வாயின் வழியாக வெளிப்படும்.
|