| 101 |
மாழ்வ ரோதையு
மெள்மலி யார்ப்பொடு
சூழ்வ ரோதையுஞ் சுட்டெரி யாழியை
யாழ்வ ரோதையு மங்கணி னாடொறுந்
தாழ்வ ரோதையுஞ் செய்துயர் சாற்றலோ. |
| |
"மாழ்வர் ஓதையும்,
எள் மரி ஆர்ப்பொடு
சூழ்வர் ஓதையும், சுட்டு எரி ஆழியை
ஆழ்வர் ஓதையும், அங்கணின் நாள்தொறும்
தாழ்வர் ஓதையும் செய் துயர் சாற்றவோ? |
"அங்கு
மயங்கிப் புலம்புவோர் ஓசையும், இகழ்ச்சி நிறைந்த
முழக்கத்தோடு வந்து சூழ்ந்து நிற்போர் ஓசையும், சுடப்பட்டு அந்த
நெருப்புக் கடலுள் ஆழ்ந்து போவோர் செய்யும் ஓசையும், அங்கு
நாள்தோறும் வந்து விழுபவர் செய்யும் ஓசையும் தரும் துயரைச் சொல்லவும் இயலுமோ?
| 102 |
இனிய வுண்டலு
மின்னலு ரைத்தலுங்
கனிய இன்பொடு காசும லிந்தவாய்
நனிய ழன்றுநஞ் சுண்டுப கைத்தபேய்
முனிய வந்தது யர்முடி யாதரோ. |
| |
"இனிய உண்டலும்
இன்னல் உரைத்தலும்
கனிய இன்பொடு காசு மலிந்த வாய்
நனி அழன்று, நஞ்சு உண்டு, பகைத்த பேய்
முனிய, வந்த துயர் முடியாது அரோ. |
"இனியவற்றை
உண்ணுதலாலும் துன்பம் தருவனவற்றைச்
சொல்லுதலாலும் கனிந்த இன்பங் கண்டமையால் பாவம் மிகுந்த வாய்
நெருப்பினால் மிகக் கொதித்து, நஞ்சை உண்டு, பகைத்த பேய்கள்
சினத்தலோடு, அடைந்த துயரம் என்றுமே முடிவு பெறாது.
இனிய
உண்ணுதலின் பாவமாவது, இனியவையென்று மிதமிஞ்சி
உண்ணுதலும் விலக்கப்பட்டவற்றை உண்ணுதலுமாம். இன்னல்
உரைத்தலாவது, தீயவற்றைச் சொல்லுதலால் தான் கெடுவதோடு பிறரும்
கெடக் காரணமாதலாம்.
|