| 105 |
அஞ்சி வீமம
ழுங்குருக் காண்டலு
மெஞ்சி லாநிறை நீரிழிந் தோடலுந்
துஞ்சி லாவிழி தோயழ றூவலும்
விஞ்சி நேரில வெய்துறீஇ மாழ்குவார். |
| |
"அஞ்சி வீமம்
அழுங்கு உருக் காண்டலும்,
எஞ்சு இலா நிறை நீர் இழிந்து ஓடலும்,
துஞ்சு இலா விழி தோய் அழல் தூவலும்
விஞ்சி, நேர் இல வெய்து உறீஇ மாழ்குவார். |
"கண்ணாற்
பாவஞ் செய்தோர் அஞ்சிப் பயங்கரத்து அழுந்தத் தக்க
பேய் உருவங்களைக் காணுதலும், குறையாமல் கண்ணில் நிறைந்த நீர்
வடிந்து ஓடுதலும், தூக்கங் கொள்ளாத கண்களில் தோயுமாறு பேய்கள்
நெருப்பைத் தூவுதலும் மேன்மேலும் மிகுவதனால், நிகரில்லாத கொடுமைக்கு
ஆளாகி மயங்குவர்.
| 106 |
நால்வ கைப்பொறி
நண்ணியைந் தாம்பொறிப்
பால்வ கைப்புரை விஞ்சிய பான்மையாற்
சால்வ கைப்புத வெங்கணாஞ் சாற்றுரை
மேல்வ கைத்துயர் மெய்த்துய ராகுமால். |
| |
"நால் வகைப்
பொறி நண்ணி, ஐந்தாம் பொறிப்
பால் வகைப் புரை விஞ்சிய பான்மையால்,
சால் வகைப் புதவு எங்கணும் சாற்று உரை
மேல் வகைத் துயர் மெய்த் துயர் ஆகும் ஆல். |
"மூக்கு
முதலாகச் சொல்லிய நான்கு வகைப் பொறிகளும்
துணையாகப் பொருந்தி, ஐந்தாம் பொறியாகிய உடலினிடத்துப் பாவ
வகைகள் மிஞ்சிக் காண்கின்ற தன்மையால், சொல்லும் உரைக்கு மேற்பட்ட
வகையாக நரகெங்கிலும் மிகுந்துள்ள பலவகைத் துயர்களும் உடலுக்கு உரிய
துயர்களாய் அமையும்.
| 107 |
ஈறு மொன்றில
வின்னணந் தீயரே
மாறு மொன்றில மாழ்கிய ழுங்குளந்
தேறு மொன்றில தீக்கடன் மூழ்குவார்
காறு மொன்றில வேகவெக் காலுமே. |
|