"ஈறும் ஒன்று
இல இன்னணம் தீயரே
மாறும் ஒன்று இல மாழ்கி, அழுங்கு உளம்
தேறும் ஒன்று இல தீக்கடல் மூழ்குவார்,
காறும் ஒன்று இல வேக எக் காலுமே. |
"தீயவர்கள் இவ்வாறு முடிவு ஒன்றும் இல்லாமலும் மாறுதல்
ஒன்றும்
இல்லாமலும் மயங்கி, அழுந்தும் உள்ளம் தேறும் வழி ஒன்றும் இல்லாமலும்
அளவு ஒன்றும் இல்லாமலும் எக்காலமும் கிடந்து வேகுமாறு அந்நெருப்புக்
கடலில் மூழ்குவர்.
| 108 |
உலைகொ டீயிலி
ரும்புறழ் வெந்துவெந்
தலைகொ டீயில மிழ்ந்திய மிழ்ந்தியே
கொலைகொ டீயுகங் கோடிகள் கோடி போய்ப்
புலைகொ டீயவர் பூதியில் வேகுவார். |
| |
"உலை கொள்
தீயில் இரும்பு உறழ் வெந்து வெந்து,
அலை கொள் தீயில் அமிழ்ந்தி அமிழ்ந்தியே,
கொலை கொள் தீ யுகம் கோடிகள் கோடி போய்,
புலை கொள் தீயவர் பூதியில் வேகுவார். |
"நீசம்
கொண்ட பாவிகள் அடுப்பில் உள்ள நெருப்பில் இரும்பு போல
நரகத்தில் வெந்து வெந்து, கடல் போல் அலைகள் கொண்ட நெருப்பு
வெள்ளத்தில் மூழ்கி மூழ்கி, கொலைத் தன்மை கொண்டுள்ள அந்நெருப்பில்
கோடிக்கணக்கான கோடியுகங்கள் சென்ற பின்னரும், நீறு ஆகாமல் வெந்து
கொண்டேயிருப்பர்.
| 109 |
பாடி யாடியின்
பாதல்ப கற்பல
நீடி லாகுல மாமென நீங்குவாய்
வாடி லாவளர் நோய்கள்ம லிந்துகங்
கோடி கோடி பொறுப்பது கொள்கையோ. |
| |
"பாடி ஆடி இன்பு
ஆதல் பகல் பல
நீடில், ஆகுலம் ஆம் என நீங்குவாய்.
வாடு இலா வளர் நோய்கள் மலிந்து, உகம்
கோடி கோடி பொறுப்பது கொள்கையோ? |
|