பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 354

     "பாடியும் ஆடியும் தீய இன்பம் கொள்ளுதல் பல நாள் நீடிக்குமாயின்,
மறுவாழ்வில் துன்பம் உண்டாகும் என்று உணர்ந்து அவற்றை விட்டு
நீங்குவாய். நரகத்தில் வாடாமல் வளர்கின்ற துன்பங்கள் மலிய, அவற்றைக்
கோடி கோடி யுகங்கள் தாங்க முற்படுவது கொள்ளத் தக்கதோ?

 
                            110
இலைக ளெண்ணிமு கிற்றுளி யெண்ணிநீ
ரலைகொ ணுண்மண லெண்ணியு மத்துணை
புலைகொள் பூதியி லாண்டுகள் போயினு
நிலைகொள் பீடைகள் நீங்கில வேகுவார்.
 
"இலை கள் எண்ணி, முகில் துளி எண்ணி, நீர்
அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை
புலை கொள் பூதியில் ஆண்டுகள் போயினும்
நிலை கொள் பீடைகள் நீங்கு இல வேகுவார்.

     "மரங்களின் இலைகளையெல்லாம் எண்ணி, மேகங்களின்
துளிகளையெல்லாம் எண்ணி, கடல் நீரின் அலை மோதும் கரை
எங்குமுள்ள நுண்ணிய மணல்களையெல்லாம் எண்ணிக் கூட்டிச் சேர்த்து,
அத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும், பாவிகள் நீசம் நிறைந்த
நரகத்தில் நிலையான துன்பங்கள் நீங்கப் பெறாது, பின்னும் வெந்து
கொண்டேயிருப்பர்.

 
                 111
நல்ல தொன்றில வாகுல நல்கிய
தல்ல தொன்றில வாவிய மேற்கதிச்
செல்ல தொன்றில தீவினை செய்பகை
வெல்ல தொன்றில யாண்டையும் வேகுவார்.
 

"நல்லது ஒன்று இல, ஆகுலம் நல்கியது
அல்லது ஒன்று இல், அவாவிய மேல் கதிச்
செல் அது ஒன்று இல, தீவினை செய் பகை
வெல் அது ஒன்று இல யாண்டையும் வேகுவார்.


     "நன்மை ஒன்றும் இல்லாமலும், துன்பமே தருவதல்லாமல் இன்பமென்ற
ஒன்றும் இல்லாமலும், விரும்பிய வான்வீடாகிய மேற்கதி செல்வதற்கான
வழி ஒன்றும் இல்லாமலும், தமது தீய பாவச் செயல்கள் செய்யும் பகையை
வெல்வதற்கான வழி ஒன்றும் இல்லாமலும் பாவிகள் எக்காலமும் வேகுவர்.