| 112 |
வேக வேக
விளிவுற வேண்டுவார்
நோக நோகவும் பொன்றிலர் நோன்றில
ரேக வேகவ ருந்துய ரெஞ்சிலா
வாக வாகுல மாற்றிலர் விம்முவார். |
| |
"வேக வேக, விளைவு
உற வேண்டுவார்;
நோக நோகவும் பொன்று இலர்; நோன்று இலர்;
ஏக ஏக அருந் துயர் எஞ்சு இலா
ஆக, ஆகுலம் ஆற்று இல விம்முவார்: |
"பாவிகள்
நரக நெருப்பில் வேக வேக, அது முடிவு பெறாமையால்
தாம் இறந்து போதலையும் விரும்புவார்; அவ்வாறு நோக நோகவும் இறந்து
போதல் இலர்; அதனைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலும் இலர்; நாட்கள்
செல்லச் செல்லப் பொறுத்தற்கரிய துயரம் சிறிதும் குறைதல்
இல்லாதவராகவும், துயரத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாதவராகவும்
விம்மித் தவிப்பர்:
இவ்வாறு
சூசை நரக நெருப்பின் கொடுமையை விளக்கி, நரகத்தவர்
புலம்பலைத் தொடர்ந்து சொல்லுகின்றான்.
நரகத்தவர்
புலம்பல்
-
மா, தேமா, கூவிளம், தேமா, புளிமாங்காய்
| 113 |
அந்தோ
வந்தோ வீட்டையி ழந்தீங் கழல்மூழ்க
வந்தோ மந்தோ புன்னிமிழ் நக்கி வரைவின்றி
வெந்தோ மந்தோ மாறில வேவோம் வினைமுற்றி
எந்தோ மந்தோ விப்பகை யீட்டிற் றெனவார்ப்பார். |
| |
"அந்தோ, அந்தோ!
வீட்டை இழந்து, ஈங்கு அழல் மூழ்க
வந்தோம்; அந்தோ! புன் இமிழ் நக்கி, வரைவு இன்றி
வெந்தோம்; அந்தோ! மாறு இல வேவோம்; வினை முற்றி,
எம் தோம், அந்தோ, இப்பகை ஈட்டிற்று!' என ஆர்ப்பார். |
"ஐயோ,
ஐயோ! மோட்ச வீட்டை இழந்து, இங்கே நெருப்பில் மூழ்க
வந்து சேர்ந்தோம்; ஐயோ! அற்ப இன்பத்தை உலகில் நக்கி உண்டு, இங்கே
வரையறை இன்றி வெந்தோம்; ஐயோ! மாற்றம் இல்லாமல் வேவோம்; தீய
|