பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 358

     'காமத்து அமிழ்கின்றோம்' என்பது இவ்வுலக வாழ்வையும்,
'வேகுதும்' என்பது மறுவுலக வாழ்வையும் எண்ணி, மேல் ஒன்றும்
செய்ய இயலாமையால் தளர்வதாகக் கொள்க. துன்பங்கட்கெல்லாம்
முடிவென்று கருதப்படும் சாவும் நரகத்தில் இல்லாமையால், அது
மிகக்கொடியதாயிற்று.

 
                       118
மெய்யார் நன்னூல் வேதந கைத்து விழைவொத்த
மையார் புன்னூற் பற்கதை யெண்ணி வடுமல்கப்
பொய்யார் மையார் தேவரோ டந்தோ புதவெய்தி
மொய்யார் தீயின் மூழ்கின மென்றுண் முரிகிற்பார்.
 
'"மெய் ஆர் நல்நூல் வேதம் நகைத்து, விழைவு ஒத்த
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க,
பொய் ஆர் மை ஆர் தேவரோடு, அந்தோ, புதவு எய்தி,
மொய் ஆர் தீயில் மூழ்கினம்!' என்று உள் முரிகிற்பார்.

     "வேறுசிலர், 'உண்மை நிறைந்த நல்ல வேதநூலை இகழ்ந்து மனித
விருப்பத்திற்கு இசைந்த குற்றம் நிறைந்த பொய் நூல்கள் கூறிய பல
கதைகளை உண்மையென்று எண்ணி நடந்தமையால் பாவம் பெருகப் பெற்று,
அந்நூல்கள் கூறிய பொய் நிறைந்த குற்றம் நிறைந்த தேவர்களோடு, ஐயோ,
நரகத்தை அடைந்து, மொய்த்து நிறைந்த இத்தீயில் மூழ்கினோம்!' என்று
உள்ளம் ஒடிவர்.

 
                   119
ஆய்வா ரெண்ணா நல்லற நிந்தித் தழிவுற்றார்
நோய்வார் நஞ்சுண் பார்பசி யாற்றார் நுகர்வாற்றார்
காய்வா ரார்ப்பார் வீழ்ந்தெரி யாழ்வார் கரைகாணா
தோய்வார் நீந்தா ரூழியும் வேவார் துகடீயார்.
 
"ஆய்வார் எண்ணா, நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார்
நோய் வார் நஞ்சு உண்பார்; பசி ஆற்றார்; நுகர்வு ஆற்றார்
காய்வார்; ஆர்ப்பார்; வீழ்ந்து எரி ஆழ்வார்; கரை காணாது
ஓய்வார்; நீந்தார்; ஊழியும் வேவார்; துகள் தீயார்.

     "மெய்யை ஆராய்பவர் சொல்லை எண்ணாமல், நல்ல அறத்தை
நிந்திந்து அழிவைத் தேடிக் கொண்ட பாவிகள் துன்பம் நீளச் செய்கின்ற