|
நஞ்சை உண்பர்; அதனாலும்
பசியை ஆற்றிக் கொள்ளார்; எதையும் நுகர
இயலாதவராய்ச் சினம் கொள்வார்; முழங்குவார்; விழுந்து நெருப்பினுள்
மூழ்குவார்; கரைகாண இயலாது ஓய்வார்; நீந்தவும் முற்படார்; ஊழிக்
காலமெல்லாம் வேவார்; வெந்தும், தம் பாவம் அழியப் பெறார்.
| 120 |
அணியும் பாங்கே
காமம றுத்தீங் கறமெய்தத்
துணியும் பாங்கே நிற்கரி தென்றாய் சுடுமூழற்
கணியும் பாங்கோ நிற்கெளி தென்பாய் கணைவார்வில்
பணியும் பாங்கோ டொன்னல ரேற்றும் பரிசன்னோய். |
| |
"அணியும் பாங்கே
காமம் அறுத்து ஈங்கு அறம் எய்தத்
துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய். சுடும் ஊழல்
கணியும் பாங்கோ நிற்கு எளிது என்பாய், கணை வார் வில்
பணியும் பாங்கோடு ஒன்னலர் ஏற்றும் பரிசு அன்னோய்? |
"அம்பு
பூட்டிய நீண்ட உன் வில்லைப் பணியும் தன்மையோடு
பகைவர் போற்றும் பரிசு போன்ற வாமனே, உடலோடு இயல்பாகப்
பொருந்தியுள்ள தன்மையினால் காமத்தை அறுத்து இவ்வுலகில் அறத்தை
அடையத் துணியும் தன்மையே உனக்கு அரியது என்றாய். அப்படியானால்,
சுடும் நரகத்தின் கொடுமையை மதிப்பிடும் தன்மையோ உனக்கு எளிது என்பாய்?
| 121 |
நசையுற் றுற்ற
தீதற நொந்தே நடையொன்றோ
வசையுற் றுற்ற தீயுறீஇ யென்றும் வயாவொன்றோ
தசையுற் றுற்ற யாவரு மிஃதே தவிராதென்
றிசையுற் றுற்ற நூல்விதி சொன்னா னிசைமேலான். |
| |
"நசை உற்று உற்ற
தீது அற நொந்தே நடை ஒன்றோ,
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது" என்று
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசைமேலான். |
"ஒன்றில்
ஆசைக்கு இடம் தந்து அதனால் உண்டான தீமை அறும்படி
மனம் நொந்து திருந்தி நடப்பது, ஒன்றில் வசைக்கு இடம் தந்து அதன்
பயனாய் அமைந்த நரகத் தீயை அடைந்து என்றும் துன்புறுதல் - இது
உடல் கொண்டு பிறந்த யாவர்க்கும் தவிர்க்க முடியாதது" என்று, புகழில்
|