பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 361

     "இன்ப நாட்டத்தால் செய்து கொண்ட பாவம் விளைவிக்கும் பயன்
இந்த நரகமேயானால், இவ்வுலகில் துன்பத்தால் அடைந்து கொண்ட தவமே
இனியது" என்பர்; "பாவம் பெருகுவதனால் பிற்காலத்தில்
கொள்ளவிருக்கின்ற துயரத்தைப் பற்றி எண்ணாதவரே, தம் நிலை பிறழாது,
ஓர் அன்பின் அடிப்படையிற் கொண்ட காமமாகிய அது, பாவமே எனினும்,
எமக்கு இன்பமானது என்பர்" என்றும் சொல்லுவர்.

     'நிலை பிறழாமை' இங்குக் காம இன்பத்தைக் கருதும் தீய
நிலையினின்று பிறழ்ந்து நன்னெறிப் படாமையைக் குறித்து நின்றது.

 
                           124
பொன்னே ரொள்பூஞ் சாயலை வெஃகல் புதவுய்த்தே
லந்நே ருண்டோ வோர்பகை காத லல தென்பார்
மின்னே ரொல்கி மாறிய வின்ப வினைகாட்டிக்
கொன்னே மாளும் வாழ்வுயி ருண்ணுங் கொலையென்பார்.
 
"பொன் நேர் ஒள் பூஞ் சாயலை வெஃகல் புதவு உய்த்தேல்,
அந் நேர் உண்டோ ஓர் பகை, காதல் அலது?" என்பார்;
'மின் நேர் ஒல்கி மாறிய இன்ப வினை காட்டி,
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை". என்பார்.

     "பொன்னைப் போல் ஒளி பொருந்திய அழகிய முகச்சாயலை
விரும்புதல் நரகத்தில் கொண்டு சேர்க்கு மாயின், காதலே அல்லாது
அதற்கு நிகரான வேறொரு பகை உண்டோ? என்பர்; "மின்னல் போல்
ஒடுங்கி மாறக் கூடிய இன்பக் செயலைப் பெரிதாகக் காட்டி, வீணே மடியும்
வாழ்க்கை ஆன்மாவையே உண்டு தொலைக்கும் கொலையாகும்" என்று
சொல்வர்.

 
                     125
நரகங் கொண்ட தீநிலை யிஃதேல் நனியோர்ந்தால்
விரகங் கொண்ட தீயைய விக்கும் வினையென்பார்
பிரதங் கொண்ட தீயவர் வைகும் பெரிதூழல்
சுரதங் கொண்ட நாமுறும் வீட்டின் சுரமென்பார்.
 
"நரகம் கொண்ட தீ நிலை இஃதேல், நனி ஓர்ந்தால்,
விரகம் கொண்ட தீயை அவிக்கும் வினை" என்பார்;
பிரதம் கொண்ட தீயவர் வைகும் பெரிது ஊழல்
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம்" என்பார்.