|
"நரகம்
கொண்டுள்ள தீயின் தன்மை இதுவாயின், நன்கு உணர்ந்து
பார்த்தால், அதுவே காமம் கொண்டுள்ள தீயை அவிக்கும் செயலாக
அமையும்" என்பர்; இம்மை இன்பம் எனும் தேனைக் கொண்ட தீயவர்
தங்கியிருக்கும் பெரிய இடமாகிய நரகமே உண்மை அன்புகொண்ட நாம்
சென்று சேரும் மோட்ச வீட்டின் வழி ஆகும்" என்றும் சொல்வர்.
நரக
நெருப்பின் கொடுமை பற்றிய நினைவு காமத்தை அவிப்பதனால்
வான் வீடு சேர வழியாகவும் அமையும் என்பது கருத்து.
| 126 |
என்ன நொந்தார்
நொந்துணர் வெய்தி யெரியத்தீ
யுன்ன வுள்ளார் தீயற வுள்ளத் துறுதண்ணந்
துன்ன வாழ்ந்தார் நல்லற மெய்தத் துணிவுற்றார்
மின்ன விண்ணில் வீழ்துளி யொப்ப விழி நீரார |
| |
என்ன நொந்தார்
நொந்து உண்ர்வு எய்தி, எரி அத்தீ
உன்ன உள் ஆர் தீ அற, உள்ளத்து உறு தண்ணம்
துன்ன வாழ்ந்தார்; நல் அறம் எய்தத் துணிவு உற்றார்,
மின்ன விண்ணில் வீழ் துளி ஒப்ப விழி நீரார். |
என்று
இவ்வாறெல்லாம் சொல்லிச் சூழ நின்றோர் நொந்தனர்;
நொந்து நல்லுணர்வு அடைந்து, எரியும் அந்நரகத் தீயை நினைக்க நினைக்க
உள்ளே பொருந்திய காமத் தீ நீங்கப் பெற்று உள்ளத்தில் மிக்க குளிர்ச்சி
பொருந்த வாழ்ந்தனர்; மின்னவே வானிலிருந்து விழும் மழைத்துளி போலக்
கண்ணீர் பெருகியவராய், நல்ல அறத்தைக் கடைப்பிடிக்கத் துணிவு
அடைந்தனர்.
வாமன்
மன மாற்றம்
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 127 |
மதுக்கலத்
தலர்பூ வாயான்
வழிந்ததே
னொத்த சொல்லால்
விதுக்கலத் திழிந்த வில்போல்
விரித்தநூ
லனைத்துங் கேட்டுப்
புதுக்கலத் தெரித்த தீம்பால்
பொங்கல்போ
லுளத்திற் பொங்கி
யொதுக்கலற் றருவிக் கண்ணீ
ருயிர்த்தனன்
வாமன் மாதோ. |
|